கஜேந்திரகுமாருக்கு மேலும் 3 மாத விடுமுறை

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்ட எம்.பி.யுமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு நாடாளுமன்றத்தினால் 3 மாதங்களுக்கு விடுமுறைவழங்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபே வர்தன தலைமையில் கூடியது. இதனையடுத்து சபாநாயகர் அறிவிப்பு, ஜனாதிபதி உரை , எதிர்கட்சித் தலைவரின் கருத்தையடுத்து எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்லவினால் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கான விடுமுறை முன்மொழியப்பட்டது .

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்ட எம்.பி.யுமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு ஜூலை 2 ஆம் திகதியிலிருந்து 3 மாத காலங்களுக்கு விடுமுறையளிக்குமாறு வேண்டுகின்றேன் என லக்ஷ்மன்
கிரியெல்லவினால் விடுமுறை முன்மொழியப்பட்டது. இதனை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் எம்.பி.யான செல்வராசா கஜேந்திரன் வழிமொழிந்தார்.

இதனையடுத்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்ட எம்.பி.யுமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு நாடாளுமன்றத்தினால் 3 மாதங்களுக்கு விடுமுறை வழங்க சபை இணக்கம் வெளியிட்டது.