10 கட்சிகளுடன் பொதுஜன பெரமுன புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்து

பொதுஜன பெரமுன, 10 அரசியல்கட்சிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்சற்று முன்னர் கைச்சாத்திட்டுள்ளதாகதெரிவிக்கப்படுகின்றது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்விஜயராமவில் அமைந்துள்ள எதிர்க்கட்சித்தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின்உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் வைத்துகைச்சாத்திடப்பட்டுள்ளதாகதெரிவிக்கப்படுகின்றது. பொதுஜன பெரமுனவுடன் இணைந்துசெயல்பட்ட அரசியல் கட்சிகளும்பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்காதஅரசியல் கட்சிகளுமே இவ்வாறுபுரிந்துணர்வு ஒப்பந்தங்களில்கைச்சாத்திட்டு உள்ளன. மௌபிம ஜனதா கட்சி, இலங்கைதொழிலாளர் ஐக்கிய முன்னணி, தமிழர்ஐக்கிய சுதந்திர முன்னணி, ஈழவர்ஜனநாயக முன்னணி, முஸ்லிம் உலமாகட்சி, லிபரல் கட்சி, நவ சிஹல உறுமய,ஜனநாயக தேசிய இயக்கம், எக்சத் லங்காமகா சபா கட்சி மற்றும் பூமிபுத்திர கட்சிஆகிய 10 கட்சிகளுடனே இவ்வாறுஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இந்து-பெளத்த மாநாட்டில் கலந்துக்கொள்ள, மனோ கணேசன், காமினி ஜயவிக்கிரம, இந்தியா பயணம்

இந்தியாவின் பீஹார் மாநிலத்தில், மலைகளால் சூழப்பட்டு புண்ணிய தலங்கள் நிறைந்த, புராதன நகரமான ராஜ்கிரில் “தர்ம-தம்ம மாநாடு” என்ற தலைப்பில் புது டெல்லி இந்தியா பவுண்டேசன் நிறுவனம் நடத்தும் ஐந்தாவது சர்வதேச இந்து-பெளத்த...

சிறீலங்கா அரச தலைவர் தேர்தல் நெருங்கும்போது சம்பந்தருக்கு தோன்றியுள்ள தமிழ்த் தேசிய சிந்தனை

சர்வதேசநாடுகளுக்கு அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் இன்னும் நிறை வேற்றப்படவில்லை. இந்த நிலையில் சர்வதேச சமூகம் அரசியல், இராஜதந்திர, பொருளாதார ரீதியாக இலங்கை அரசுக்குஅழுத்தம் கொடுக்க வேண்டும் என தமிழ்தேசியகூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.   நாடாளுமன்றத்தில்...

அரசாங்கத்தின் பங்காளியே தமிழ் தேசிய கூட்டமைப்பு : விமல்

சிங்களவர்கள் தமிழ் மக்களின் விரோதிகள் என்ற பிரசாரத்தையே தமிழ் தேசிய கூட்டமைப்பு மேற்கொண்டுவருகின்றது.அத்துடன் அரசாங்கத்தின் பங்காளியாக இருந்துகொண்டு வாக்களித்த மக்களை ஏமாற்றுவதற்கே அரசாங்கத்துக்கு எதிராக செயற்பட்டுவருகின்றது என எதிர்க்கட்சி உறுப்பினர் விமல் வீரவன்ச...

சுமந்திரனே வாய்ப்பைக் கெடுத்து விட்டார் – டிலான் பெரேரா குற்றம்சாட்டு

தேசிய பிரச்சினைக்கு தீர்வு வழங்கும் வகையில், அரசியலமைப்பில் அதிகாரப்பகிர்வை வழங்க மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் சம்மதிக்க இருந்த சந்தர்ப்பத்தை சுமந்திரனே கெடுத்து விட்டார். எனத் அதற்கான பொறுப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக் கொள்ள...

தரவை பிள்ளையார் வீதி கடற்கரைப் பள்ளி வீதியானது

500வருடங்களுக்கும் மேலாக பழமை வாய்ந்த தரவை சித்தி விநாயகர் ஆலய வீதி (கே.பி.எஸ்) தார்சாலையாக மாற்றியமைத்திருந்தாலும் பெயர் மாற்றம் செய்யப்பட்டிருப்பதானது, இன முரண்பாட்டை தோற்றுவிக்கும் என அரசியல் தலைவர்கள் கூறியுள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சியின்...

சிறிலங்கா வந்து சென்ற மர்ம விமானம்

கட்டுநாயக்கா விமான நிலையத்திற்கு சில தினங்களுக்கு முன்னர் வருகை தந்திருந்த பெயர் குறிப்பிடப்படாத விமானம் தொடர்பான மர்மம் நீடித்து வருகின்றது. எந்தவொரு நாட்டினதும் இலச்சினைகள் இல்லாது, குறித்த விமானம் வந்து சென்றதாக தகவலறிந்த...

மகளின் திருமண நிகழ்விற்காக நளினி பிணையில் விடுதலை

மகளின் திருமண ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக, 28 வருடங்களாக சிறைவாசம் அனுபவித்த, நளினி இன்று பிணையில் விடுதலையாகியுள்ளார். துப்பாக்கி தாங்கிய பொலிஸ் பாதுகாப்புடன் சத்துவாச்சாரயை அடுத்த ரங்காபுரத்தில் உள்ள திராவிட இயக்கத் தமிழர் பேராயர் சிங்கராயர்...

  ஐ.நா அறிக்கையாளரை அனுமதித்த பதில் வெளிவிவகார செயலர் பதவி நீக்கம்

தலைமை நீதியரசர் மற்றும் மேல்நீதிமன்றநீதிபதிகளை,  ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்சந்திப்பதற்கு ஒழுங்கு செய்யுமாறுநீதியமைச்சின் செயலருக்கு அறிவுறுத்தலை அனுப்பிய- வெளிவிவகார அமைச்சின்மேலதிக செயலர் அகமட் ஜவாட்டை பதவியில்இருந்து நீக்குமாறு சிறிலங்கா அதிபர்மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். நேற்று முன்தினம்...

பிரபாகரன் இருந்திருந்தால் இப்படிச் செய்ய தைரியம் வந்திருக்குமா ? – சார்ள்ஸ் எம்.பி.

திருகோணமலை கன்னியா வெந்நீரூற்று பகுதியில் இந்துக்களின் மத குருவான தென்கயிலை ஆதீனம் மீது, சிங்களக் காடையர்களால் சுடுநீர் ஊற்றப்பட்டது போல் பௌத்த பிக்கு ஒருவருக்கு நடந்திருந்தால் இந்த நாட்டில் இருக்கும் சிறுபான்மையினரின் நிலை...