ஜோ பைடனின் வாகன அணியுடன் கார் மோதியது

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் கார் மீது இனந்தெரியாத கார் மோதியதால் அமெரிக்காவில் பதற்றம் எற்பட்டுள்ளது. நேற்று(17) இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் பைடனும், அவரது மனையியும் காயமடையவில்லை என அமெரிக்காவின் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அமெரிக்காவின் வில்மிங்டன் பகுதியில் உள்ள டெலவெறவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது அமெரிக்க அதிபரும் அவரின் மனைவியும் தமது தலைமையகத்தில்இருந்துவெளியேறியபோது மிகப்பெரும் சத்தம் ஒன்று கேட்டதாகவும், அவரின் வாகன அணியுடன் கார் ஒன்று வேகமாக வந்து மோதியதாகவும் அமெரிக்காவின் இரகசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. உடனடியாகவே மோதிய காரை சூழந்த இரகசிய பாதுகாப்பு அதிகாரிகள் தமது துப்பாக்கிகளை எடுத்து சுடும் நிலைக்கு கொண்டுவந்திருந்தனர். எனினும் காரின் ஓட்டுனர் தனது கைகளை உயர்த்தியதும், அந்த பிரதேசத்தில் பெருமளவான ஊடகவியலாளர் கள் பிரசன்னமாகியிருந்ததும் அவரின் உயிரை காப்பாற்றியதாக தெரிவிக்கப்படுகின்றது. தனது மனைவியின் வரவுக்காக பைடன் காத்திருந்தவேளை இந்த தாக்குதல் இடம்பெற்றதும், அவர் அதில் அதிர்ச்சியடைந்து காணப்பட்டதும் அவரை சூழ பாதுகாப்பு படையினர் உடனடியாகவே சூழந்துகொண்டதும் தெளிவாக அவதானிக்கப்பட்டதாக என்பிசி ஊடனம் தெரிவித்துள்ளது. பைடனின் வாகன அணிக்கான பாதுகாப்புக்களை அமெரிக்காவின் இரகசிய படையணி செய்துவருவதாகவும், தற்போதைய சம்பவம் அவரை கொலை செய்யும் நொக்கத்துடன் மேற்கொள்ளவில்லை எனவும்இ இரகசிய பாதுகாப் படையணியின் கட்டளை அதிகாரி கொபெக் தெரிவித்துள்ளார்.

இலக்கை அடையும் வரை சமாதானம் இல்லை – பூட்டீன்

உக்ரைன் மீதான படைய நடவடிக்கையின் இலக்கில் மாற்றமில்லை, அதனை அடையும்வரை சமாதானம் என்ற பேச்சுக்கு இடமில்லை என ரஸ்ய அதிபர் விளமிடீர் பூட்டீன் கடந்த வியாழக்கிழமை(14) தெரிவித்துள்ளார். எதிர்வரும் வருடம் ரஸ்யாவில் இடம்பெறவுள்ள அரச...

கேணல் தர அதிகாரி உட்பட 115 இஸ்ரேலிய படையினர் காசாவில் பலி

காசா மீது இஸ்ரேலினால் நவம்பர் மாதம் 2 ஆம் நாள் ஆரம்பிக்கப்பட்ட படை நடவடிக்கையை தொடர்ந்து கடந்த வியாழக்கிழமை(14) வரையிலும் 115 படையினர் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய தரப்பு தெரிவித்துள்ளது. நேற்று கொல்லப்பட்டவர்களில் கொலானி இலக்கு...

இரண்டு மாதத்தில் 63 ஊடகவியலாளர்கள் படுகொலை

உடகவியலாளர்களுக்கு மிகவும் மோசமான ஆண்டாக இந்த வருடம் கடந்து செல்கின்றது. கடந்த வருடம் 61 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டபோதும் இந்த வருடம் பாலஸ்த்தீன - இஸ்ரேல் போரின் போது மட்டும் 63 இற்கு மேற்பட்ட...

தாக்குதல் விமானத்தின் பாதுகாப்புடன் சென்ற ரஸ்ய அதிபர்

ரஸ்ய அதிபரின் தனிப்பட்ட விமானம் சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவற்றுக்கு பயணம் மேற்கொண்டபோது அதற்கு பாதுகாப்பாக நான்கு எஸ்.யூ-35எஸ் ரக தாக்குதல் விமானங்கள் சென்றுள்ளன. அந்த பிராந்தியம் பாதுகாப்பு அற்றது...

விண்வெளிக்கு மிருகத்தை அனுப்பியது ஈரான்

ஈரானின் தொழில்நுட்ப வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து செல்கின்றது. இந்த நிலையில் ஈரான் விண்வெளிக்கு கடந்த புதன்கிழமை(6) மிருகத்தை அனுப்பியுள்ளது. மேற்குலக நாடுகள் மனிதர்களை அனுப்புவது தொடர்பில் சிந்தித்து வருகையில் ஈரான் மிருகத்தை அனுப்பியுள்ளது....

ஐ.நாவின் சரத்து 99ஐ பயன்படுத்திய ஐ.நா செயலாளர்

ஐக்கிய நாடுகள் சபையின் சரத்து 99 ஆவதை பயன்படுத்தி காசாவில் போர் நிறுத்தம் ஒன்றை நடைமுறைப்படுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்ரொனியோ குறெரஸ் கடந்த புதன்கிழமை (6) முயற்சிசெய்துள்ளார். ஐ.நா செயலாளர்...

அமெரிக்காவில் சீக்கிய தலைவரை படுகொலை செய்ய இந்தியா முயற்சி

அமெரிக்காவில் உள்ள சீக்கிய அமைப்பு ஒன்றின் தலைவரை படுகொலை செய்வதற்கு இந்திய அரசு முயன்றுள்ளதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது. இந்தியாவின் சிசி-1 என்ற பாதுகாப்பு மற்றும் புலனாய்வு அமைப்பைச் சேர்ந்த ஒருவர் நிகில் குப்தா(52)...

காலநிலை முற்றாக சீரழியும் காலப்பகுதியில் நாம் வாழ்கின்றோம் – ஐ.நா

மனிதர்களின் வரலாற்றில் இந்த வருடமே மிகவும் வெப்பமான வருடம் என டுபாயில் கடந்த வியாழக்கிழமை ஆரம்பமாகிய கோப்-28 (COP28) என்ற காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் பேசிய ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்...

இஸ்ரேல் நடத்தும் போரில் தினமும் 250 மில்லியன் டொலர்கள் செலவு

போருக்கான செலவுகள் உள்ளடங்கலாக இஸ்ரேலின் வரவுசெலவுத்திட்ட பற்றாக்குறை 400 விகிதம் அதிகரித்துள்ளது எனவும் இஸ்ரேலின் நாணயமாக செகெல் நாணயம் 15 விகிதம் வீழச்சி கண்டுள்ளதுதாகவும் இஸ்ரேலிய தகவல்கள் தெரிவிக்கின்றன. முக்கியமான 5 வங்கிகளின் பங்குகளும்...