வாக்களிக்கும் வயதெல்லையை குறைப்பதற்கு மலேசியா திட்டம்

தேர்தல்களில் வாக்களிப்பதற்கான வயதெல்லையை 18 ஆக குறைப்பதற்கு மலேசியா அரசு திட்டமிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. 18 வயதானவர்கள் வாக்களிப்பதுடன், அவர்கள் தேர்தலிலும் நிற்பதங்கான சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் கொண்டுவந்து எதிர்க்கட்சியின் ஆதரவைப் பெறப்போவதாக மலேசியா அரசு...

ரஸ்யாவின் நவீன ஏவுகணைகள் துருக்கியை வந்தடைந்தது – அமெரிக்கா சீற்றம்

அமெரிக்காவின் கடுமையான எதிர்ப்புக்களையும் மீறி ரஸ்யாவின் தயாரிப்பான எஸ்-400 எனப்படும் நீண்டதூர விமான எதிர்ப்பு ஏவுகணைகளை துருக்கி கொள்வனவு செய்துள்ளது அமெரிக்காவுக்கு கடும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஏவுகணைகளை நாம் தெரிவுசெய்யவில்லை அது எமக்கு...

சோமாலியாவில் தேர்தல் கலந்துரையாடல் கூட்டத்தில் கார் குண்டு தாக்குதல் – பலர் பலி

சோமாலியாவின் துறைமுக நகரான கிஸ்மயோ பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் எதிர்வரும் தேர்தல் தொடர்பாக நடைபெற்ற கலந்தரையாடலின் போது நேற்று (12) இடம்பெற்ற கார்க்குண்டு தாக்குதலில் பலர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் மேலும்...

சூடானில் இராணுவப்புரட்சி முறியடிக்கப்பட்டது – சூடான் அரசு

சூடானில் மேற்கொள்ளப்பட்ட இராணுவப்புரட்சியை தாம் முறியடித்துள்ளதாக சூடானை ஆட்சிபுரியும் படைத்துறை சபை நேற்று (11) தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அது மேலும் தெரிவித்துள்ளதாவது: இந்த இராணுவப்புரட்சிக்கு திட்டமிட்ட 16 படை அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இராணுவத்தில்...

ஹொங்கொங் கடல் பகுதியில் சீன விமானப்படை போர் ஒத்திகை

ஹொங்கொங்கில் உள்ள குவாங்டாங் கடற்பகுதியில் சிறியரக மாதிரிக் கப்பல்களைக் குறிவைத்து சீன விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகொப்டர்கள் போர் ஒத்திகையில் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விமானப்படையின் 74ஆவது படையணியினர் இந்நிகழ்வில் பங்கேற்றனர். அப்போது ஏவுகணைகள், எறிகணைகள்,...

பூமிக்கு அருகே இராட்சத சிறுகோள் – ஒக்டோபர் மாதம் பூமியைத் தாக்கக்கூடும்

பூமியை நோக்கி இராட்சத சிறுகோள் ஒன்று 2,700 மெகா தொன் அழிவு சக்தியுடன் வந்து கொண்டிருப்பதாக நாசா தெரிவித்துள்ளது. இது எதிர்வரும் ஒக்டோபர் மாதம் பூமியைத் தாக்கக்கூடும் என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கோளிற்கு...

உலகின் புராதன நகரங்கள் பட்டியலில் இணைந்தது இந்தியா ஜெய்பூர்

உலகின் புராதன நகரங்களின் பட்டியலில் இந்தியாவின் ஜெய்பூர் நகரும் இணைக்கப்பட்டுள்ளது. ஐ.நா சபைக்கான கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பான யுனெஸ்கோ உலகின் மிகவும் பழமையான நகரங்கள் மற்றும் பாரம்பரிய சின்னங்களையும் புராதன...

கலிபோர்னியாவில் மீண்டும் நில நடுக்கம் – 5.4 ஆக பதிவு

கடந்த வியாழக்கிழமை (04) அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் ஏற்பட்ட மிகப்பெரும் நில நடுக்கத்தைத் தொடர்ந்து அதன் மறுதாக்கம் நேற்று (05) 5.4 அளவுக்கு பதிவாகியுள்ளது. கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற நில நடுக்கம் 20 வருடங்களின்...

ஈரான் மீது நடவடிக்கை இல்லை – ஐரோப்பிய ஒன்றியம்

அணுப் பொருட்கள் சேமிப்பு அளவு உடன்படிக்கையை ஈரான் மீறி இருந்தாலும் அதன் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எதனையும் மேற்கொள்ளப்போவதில்லை என ஐரேப்பிய ஒன்றியம் நேற்று (03) தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: 2015 ஆண்டு...

ஐரோப்பிய ஒன்றிய தலைமைப் பதவிக்கு முதன் முறையாக பெண் ஒருவர் பரிந்துரை

ஐரோப்பிய ஒன்றிய தலைமைப் பதவிக்கு முதன்முறையாக பெண் ஒருவரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஜேர்மனின் பாதுகாப்பு அமைச்சர் உர்சுலா வொன் டெரல் என்பவரே அவராவார். ஜேங் குளுட் ஜங்கரின் பதவிக்காலம் நிறைவடைய இருப்பதை அடுத்தே இந்தத்...