எமது பொருளாதார வீழ்ச்சிக்கு நாமே காரணம் – பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர்

எமது நாட்டின் உள்ளக அரசியல் பிரச்சனைகளே பொருளாதார வீழ்ச்சிக்கும் நாட்டின் அழிவுக்கும் காரணம் அதற்கு இந்தியாவோ, அமெரிக்காவோ அல்லது ஆப்கானிஸ்த்தானோ காரணமல்ல என பாகிஸ்தனின் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப் தெரிவித்துள்ளார். நாட்டின் அரசாட்சியிலும்,...

இஸ்ரேலின் போர் நிறுத்த கோரிக்கையை நிராகரித்தது ஹமாஸ்

காசாவில் இஸ்ரேல் தாக்குதல்களை முற்றாக நிறுத்தும் வரையிலும் 40 கைதிகளை விடுவிப்பதற்கான போர் நிறுத்தம் என்ற இஸ்ரேலின் கொரிக்கையை நாம் ஏற்கப்போவதில்லை என ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. ஹமாஸின் அரசியல் பிரிவின் தலைவர் இஸ்மயில்...

செக் குடியரசில் பல்கலைக்கழகத்தில் தாக்குதல் – 15 பலி, 25 பேர் காயம்

செக் குடியரசின் தலைநகர் பிராக்கில் உள்ள சார்ள் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் சக மாணவர்கள் மீது மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இதுவரையில் 15 பேர் கொல்லப்பட்டதுடன், 25 இற்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக...

இந்து சமுத்திரத்தில் அமெரிக்காவால் சீனாவுக்கு ஆபத்து

தாய்வான் போர் ஆரம்பித்தால் இந்துசமுத்திர பிராந்தியத்தால் செல்லும் சீனாவின் எண்ணைக்கப்பல்களை அமெரிக்கா கைப்பற்றும் சாத்தியங்கள் உள்ளதாக அவுஸ்திரேலியாவின் தேசிய பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர் டேவிட் புறுவ்ஸ்ரர் தெரிவித்துள்ளார். தினமும் 60 எண்ணைக் கப்பல்கள் பாராசீக வளைகுடா...

ஜோ பைடனின் வாகன அணியுடன் கார் மோதியது

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் கார் மீது இனந்தெரியாத கார் மோதியதால் அமெரிக்காவில் பதற்றம் எற்பட்டுள்ளது. நேற்று(17) இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் பைடனும், அவரது மனையியும் காயமடையவில்லை என அமெரிக்காவின் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அமெரிக்காவின் வில்மிங்டன் பகுதியில் உள்ள டெலவெறவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது அமெரிக்க அதிபரும் அவரின் மனைவியும் தமது தலைமையகத்தில்இருந்துவெளியேறியபோது மிகப்பெரும் சத்தம் ஒன்று கேட்டதாகவும், அவரின் வாகன அணியுடன் கார் ஒன்று வேகமாக வந்து மோதியதாகவும் அமெரிக்காவின் இரகசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. உடனடியாகவே மோதிய காரை சூழந்த இரகசிய பாதுகாப்பு அதிகாரிகள் தமது துப்பாக்கிகளை எடுத்து சுடும் நிலைக்கு கொண்டுவந்திருந்தனர். எனினும் காரின் ஓட்டுனர் தனது கைகளை உயர்த்தியதும், அந்த பிரதேசத்தில் பெருமளவான ஊடகவியலாளர் கள் பிரசன்னமாகியிருந்ததும் அவரின் உயிரை காப்பாற்றியதாக தெரிவிக்கப்படுகின்றது. தனது மனைவியின் வரவுக்காக பைடன் காத்திருந்தவேளை இந்த தாக்குதல் இடம்பெற்றதும், அவர் அதில் அதிர்ச்சியடைந்து காணப்பட்டதும் அவரை சூழ பாதுகாப்பு படையினர் உடனடியாகவே சூழந்துகொண்டதும் தெளிவாக அவதானிக்கப்பட்டதாக என்பிசி ஊடனம் தெரிவித்துள்ளது. பைடனின் வாகன அணிக்கான பாதுகாப்புக்களை அமெரிக்காவின் இரகசிய படையணி செய்துவருவதாகவும், தற்போதைய சம்பவம் அவரை கொலை செய்யும் நொக்கத்துடன் மேற்கொள்ளவில்லை எனவும்இ இரகசிய பாதுகாப் படையணியின் கட்டளை அதிகாரி கொபெக் தெரிவித்துள்ளார்.

இலக்கை அடையும் வரை சமாதானம் இல்லை – பூட்டீன்

உக்ரைன் மீதான படைய நடவடிக்கையின் இலக்கில் மாற்றமில்லை, அதனை அடையும்வரை சமாதானம் என்ற பேச்சுக்கு இடமில்லை என ரஸ்ய அதிபர் விளமிடீர் பூட்டீன் கடந்த வியாழக்கிழமை(14) தெரிவித்துள்ளார். எதிர்வரும் வருடம் ரஸ்யாவில் இடம்பெறவுள்ள அரச...

கேணல் தர அதிகாரி உட்பட 115 இஸ்ரேலிய படையினர் காசாவில் பலி

காசா மீது இஸ்ரேலினால் நவம்பர் மாதம் 2 ஆம் நாள் ஆரம்பிக்கப்பட்ட படை நடவடிக்கையை தொடர்ந்து கடந்த வியாழக்கிழமை(14) வரையிலும் 115 படையினர் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய தரப்பு தெரிவித்துள்ளது. நேற்று கொல்லப்பட்டவர்களில் கொலானி இலக்கு...

இரண்டு மாதத்தில் 63 ஊடகவியலாளர்கள் படுகொலை

உடகவியலாளர்களுக்கு மிகவும் மோசமான ஆண்டாக இந்த வருடம் கடந்து செல்கின்றது. கடந்த வருடம் 61 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டபோதும் இந்த வருடம் பாலஸ்த்தீன - இஸ்ரேல் போரின் போது மட்டும் 63 இற்கு மேற்பட்ட...

தாக்குதல் விமானத்தின் பாதுகாப்புடன் சென்ற ரஸ்ய அதிபர்

ரஸ்ய அதிபரின் தனிப்பட்ட விமானம் சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவற்றுக்கு பயணம் மேற்கொண்டபோது அதற்கு பாதுகாப்பாக நான்கு எஸ்.யூ-35எஸ் ரக தாக்குதல் விமானங்கள் சென்றுள்ளன. அந்த பிராந்தியம் பாதுகாப்பு அற்றது...

விண்வெளிக்கு மிருகத்தை அனுப்பியது ஈரான்

ஈரானின் தொழில்நுட்ப வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து செல்கின்றது. இந்த நிலையில் ஈரான் விண்வெளிக்கு கடந்த புதன்கிழமை(6) மிருகத்தை அனுப்பியுள்ளது. மேற்குலக நாடுகள் மனிதர்களை அனுப்புவது தொடர்பில் சிந்தித்து வருகையில் ஈரான் மிருகத்தை அனுப்பியுள்ளது....