‘உரிமையை விட்டுக்கொடுக்க்க முடியாது’ : தென்சீனக் கடல் விவகாரத்தில் பிலிப்பைன்ஸ் அறிவிப்பு

செகன்ட் தாமஸ் ஷோல் தீவில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள தனது படையினருக்குத் தேவையான பொருள்களை விநியோகம் செய்வது தொடர்பாக சீனாவுடன் பிலிப்பைன்ஸ் ஒப்பந்தம் செய்துள்ளது.

அந்தத் தீவில் உள்ள பிலிப்பீன்ஸ் படையினருக்கான அத்தியாவசியப் பொருள்களை விநியோகம் செய்வதற்கு முன்பு அதுகுறித்து தன்னிடம் தெரிவிக்க வேண்டும் என்று சீனா முன்வைத்த பரிந்துரையை அது ஏற்க மறுத்தது. மேலும் தென்சீனக் கடல் விவகாரத்தில் தனது உரிமையை விட்டுக்கொடுக்கப் போவதில்லை என்று பிலிப்பைன்ஸ் தெரிவித்துள்ளது.

தென்சீனக் கடலின் பெரும்பாலான பகுதிகளைச் சீனா உரிமை கொண்டாடுகிறது. அதில் செகன்ட் தாமஸ் ஷோலும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.