தேசிய மாநாட்டை விரைவில் நடத்துங்கள் – சிறீதரனுக்கு அனுப்பிய கடிதத்தில் சுமந்திரன் வலியுறுத்து

suma sri தேசிய மாநாட்டை விரைவில் நடத்துங்கள் - சிறீதரனுக்கு அனுப்பிய கடிதத்தில் சுமந்திரன் வலியுறுத்து“எமது வரலாற்றில் முதன்முறையாக வாக்கெடுப்பினாலே தெரிவுசெய்யப்பட்ட தலைவராகிய நீங்கள் அப்படியான
அதற்குகந்த விமர்சையோடு வைபவ ரீதியாக பதிவியேற்பது முக்கியமான விடயமாகும். எமது மக்கள் மத்தியில் எழுந்திருக்கும் பல்வேறு சந்தேகங்களுக்கும் விமர்சனங்களுக்கும் அது முற்றுப்பள்ளி வைக்கும். ஆகவே தயவு செய்து காலம் தாழ்த்தாது வெகு விரைவில் அந்தப் பகிரங்கப் பொது நிகழ்வை நடாத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன்” என தமிழரசுக் கட்சியின் தலைவர் சிவஞானம் சிறிதரனுக்கு கடிதம் எழுதியிருக்கின்றார் கட்சியின் முன்னாள் பிரதிப் பொதுச் செயலாளர் ம.ஆ.சுமந்திரன்.

ஏற்கனவே நடந்த கட்சியின் நிர்வாகிகள் தெரிவு முடிந்த முடிவு என்பதையும் இக்கடிதத்தில் சுமந்திரன் பூடகமாகச் சுட்டிக் காட்டியிருக்கின்றார். எமது கட்சி யாப்பு விதிகளுக்கு அமைவாகவும், சட்டப்படியும் தாங்களே இப்பொழுது இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர். கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று கோலாகலமாக நடைபெறவிருந்த பொது நிகழ்வு தவறான ஆலோசனைகளின் பேரிலும், கலந்துரையாடல் இன்றியும், அதிகாரமற்றதும் சட்டத்துக்கு முரணான அறிவிப்பினாலும் துரதிர்ஷ்டவசமாக பிற்போடப்பட்டுவிட்டது” என்றும் சுமந்திரன் சுட்டிக்காட்டியிருக்கின்றாா்.

“எமது வரலாற்றில் முதன் முறையாக வாக்கெடுப்பினாலே தெரிவுசெய்யப்பட்ட தலைவராகிய நீங்கள் அப்படியான அதற்குகந்த விமர்சையோடு வைபவரீதியாக பதிவியேற்பது முக்கியமான விடயமாகும். அதுமட்டுமல்லாமல், தங்களது தலைமையுரையில் எமது மக்களுக்கான விடிவுப் பாதை எப்படியானது என்ற தங்களது யோசனைகளை செவிமடுக்கப் பலரும் காத்திருந்தார்கள். அத்தோடு, எமது மக்கள் மத்தியில் எழுந்திருக்கும் பல்வேறு சந்தேகங்களுக்கும் விமர்சனங்களுக்கும் அது முற்றுப்பள்ளி வைத்திருக்கும். ஆகவே தயவு செய்து காலம் தாழ்த்தாது வெகு விரைவில் அந்த பகிரங்க பொது நிகழ்வை நடாத்துமாறும் அன்புரிமையோடு நான் கேட்டுக்
கொள்கின்றேன்” என சிறீதரனுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் சுமந்திரன் தெரிவித்துள்ளாா்.