Home Blog

Ilakku Weekly ePaper 257 | இலக்கு-இதழ்-257-அக்டோபர் 21, 2023

முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
Ilakku Weekly ePaper 257 | இலக்கு-இதழ்-257-அக்டோபர் 21, 2023

Ilakku Weekly ePaper 257

Ilakku Weekly ePaper 257 | இலக்கு-இதழ்-257-அக்டோபர் 21, 2023

Ilakku Weekly ePaper 257 | இலக்கு-இதழ்-257-அக்டோபர் 21, 2023: இன்றைய மின்னிதழ்; செய்திகள், ஆசிரியர் தலையங்கம், தாயகத்தளம், மலையகம், இந்தியத்தளம், அனைத்துலகத்தளம், ஆகிய தளங்களை தாங்கி வெளியாகி உள்ளது.

கீழ் காணும் ஆக்கங்களைத் தாங்கி வெளியாகி உள்ளது

  • காசாவும் ஈழமும் இருதேச இனங்களை ஒரு நாடாக்கினால் ஒரு தேசமக்களின் இறைமை இழப்பால் அவர்கள் இனஅழிப்படைவர் என்பதற்கு உதாரணம் ஆசிரியர் தலையங்கம்
  • மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்பின் பின்னணியில் பின்னணியில் ரகசியத் திட்டம்!அகிலன்
  • மோடிக்கான கடிதம் பயனற்ற ஒரு முயற்சி –ஐங்கரநேசன்-செவ்வி
  • போராட்டத்திற்கு ஆதரவு வழங்கிய விவசாய அமைப்புகளுக்கு அச்சுறுத்தல் –மட்டு.நகரான்
  • ஐக்கியமும் வெற்றியும் – துரைசாமி நடராஜா
  • இந்தியா…ஹிந்துமதம்… எந்தப் பெயரை மாற்ற வேண்டும்? – இயக்குனர் புகழேந்தி தங்கராஜ்
  • இஸ்ரேலின் பாதுகாப்பா? அல்லது பாலஸ்தீனத்தின் உரிமையா? – தமிழில்: ஜெயந்திரன்
  • மிகப்பெரும் போரை தடுப்பதற்கான இறுதிக்கட்டத்தில் உலகம் – வேல்ஸ் இல் இருந்து அருஸ்

சென்ற வார மின்னிதழை முழுமையாக படிக்க கீழ் உள்ள இணைப்பை அழுத்தவும்

கிளிநொச்சியில் சுற்றுலா வலயம்: சிங்கள மயமாக்கலை நிலைநாட்ட புதிய திட்டம்…

கிளிநொச்சி- பூநகரில் உல்லாச துறையை மேம்படுத்தும் வகையில் உல்லாசத்துறை வலயமொன்றை உருவாக்குவதற்கு திட்டமிட்டிருப்பதாகவும் அதற்கான இடத்தை ஒதுக்கி இருப்பதாகவும்  லங்கா பிரதமா் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மயிலிட்டி துறைமுகம் புனரமைக்கப்பட்டு நேற்றையத் தினம் (வியாழக்கிழமை) மக்களிடம் கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே பிரதமா் மேற் கண்டவாறு கூறியுள்ளார் இதன்போது அவர் மேலும் கூறியுள்ளதாவது, “கடந்த ஆட்சிக் காலத்தில் வீதிகள் மட்டுமே புனரமைப்பு செய்யப்பட்டது.

ஆனால் எங்களுடைய ஆட்சிக்காலத்தில் பொருளாதாரம், சமூக மேம்பாட்டு நடவடிக்கைகளை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு அங்கமாகவே மயிலிட்டி துறைமுகமும் அபிவிருத்தி செய்யப்படுகிறது.

Kilinoch 2 கிளிநொச்சியில் சுற்றுலா வலயம்: சிங்கள மயமாக்கலை நிலைநாட்ட புதிய திட்டம்…இதேபோன்று பருத்திதுறை துறைமுகம், காங்கேசன்துறை துறைமுகம், குருநகா், காரைநகா் போன்ற துறைமுகங்களையும் நாம் புனரமைப்பு செய்யவுள்ளோம். மேலும் பூநகரி  பிரதேசத்தில் சுற்றுலாத்துறை வலயம் ஒன்றை உருவாக்க திட்டமிட்டுள்ளோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழீழ நடைமுறை அரசு, தமிழர்களின் வரலாற்றில் அழியாத இடம்பிடிக்க வேண்டும் -அக்கினிப் பறவைகள் அமைப்பு

சுவிற்சலாந்து நாட்டில் இயங்கியரும் ‘அக்கினிப் பறவைகள்’ அமைப்பினரால் “தமிழீழ தேச கட்டமைப்புகள்” ( “Structures of Tamil Eelam : A Handbook” ) என்ற நூல் நாளை (19)  பேர்ண் நகரில் வெளியிடப்படுகிறது. ஆங்கில மொழியில் வெளிவரும்  இந்த தொகுப்பாய்வு நூல்பற்றி  மேலும் விடயங்களை  அறிந்துகொள்ள அக்கினிப்பறவைகள் அமைப்பினர் இலக்கு இணையத்திற்கு வழங்கிய நேர்காணலை நாம் எமது வாசகர்களுக்கு தருகின்றோம்.

கேள்வி –  “தமிழீழ தேச கட்டமைப்புகள்” என்ற நூலை அக்கினிப்பறவைகள் அமைப்பினராகிய நீங்கள் இன்று வெளியிடுகிறீர்கள். புலம்பெயர் தேசமொன்றில் பிறந்து வளர்ந்த  உங்களைப் போன்ற இளையோருக்கு தேசவிடுதலை சார்ந்த அமைப்பொன்றை நிறுவி செயற்படும் சிந்தனை எவ்வாறு தோற்றம் பெற்றது?

பதில் –  நாம் 2009ம் ஆண்டில் நிகழ்ந்த அழிவுகளை புலம்பெயர்ந்த தேசத்திலிருந்து பார்த்துக்கொண்டு இருந்தோம். எமக்கு அப்பொழுது இளைய வயது. அக்காலப் பகுதியில் புலம்பெயர்ந்த தேசங்களில் பல போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அவற்றில் கலந்துகொண்ட போதிலும் எம்மால் தாயகத்தில் ஏற்பட்ட அழிவினை தடுக்க முடியவில்லை.

இருப்பினும் மே 18னைத் தொடர்ந்து நாம் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்குள் எம்மை இணைத்துக் கொண்டோம். ஆனால் புலம்பெயர்ந்த நாடுகளில் இருக்கும் அமைப்புகள் செயலற்று இருந்தன (இருக்கின்றன). இவர்களுக்காக காத்திருக்க இது தருணம் இல்லை என்பதினால், நாம் இளையோராக ஒரு அமைப்பினை உருவாக்கினோம்.Logo Klein தமிழீழ நடைமுறை அரசு, தமிழர்களின் வரலாற்றில் அழியாத இடம்பிடிக்க வேண்டும் -அக்கினிப் பறவைகள் அமைப்பு

கேள்வி – இந்த அமைப்பின் மூலம் நீங்கள் வேறு எந்தவகையான செயற்திட்டங்களை முன்னெடுக்கிறீர்கள்?

பதில் – ஆம். நாம் புலம்பெயர்ந்த தேசங்களில் பிறந்த இளந் தலைமுறையினருக்கு எமது போராட்டத்தின் தேவையினையும் மற்றும் அதன் வரலாற்றினையும் எடுத்து விளக்கிவருகிறோம். அத்தோடு புலம்பெயர்ந்த தேசங்களில் வலுவிழந்திருக்கும் தமிழீழ அரசியற்தளங்களை ஒரு புறத்தில் பலப்படுத்திக் கொண்டு வருகிற வேளையில்,  மறுபுறத்தில் புதிய அரசியல் தளங்களை உருவாக்கி, விரிவாக்குகின்றோம். அதற்கு எம்மால் மீள்வெளியீடு செய்யப்பட்ட தமிழீழத் தேசிய அடையாள  அட்டை இதற்கொரு உதாரணமாகும்.

கேள்வி: இந்த நூலை இன்றைய  சூழ்நிலையில்  வெளியிடுவதில்  உள்ள முக்கியத்துவம் என்ன? 

பதில் – முதலாவது விடயம்: இந்நூலில் எடுத்துக்காட்டப்படும் தமிழீழ நடைமுறை அரசானது, சரியாக ஒரு தசாப்தத்துக்கு முன் சர்வதேச வல்லாதிக்க சக்திகளின் துணையுடன் அழிக்கப்பட்டது. அத்துடன் இவ்வரசின்  அடையாளங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. இந்த நடவடிக்கையை முறியடிக்க வேண்டியதேவை எமக்குள்ளது.

இரண்டாவது விடயம்: ஆயுதப் போராட்டமானது எமது விடுதலைப் போராட்டத்தின் ஒரு தொடர்ச்சியாகும். அதாவது இலங்கைக்குள் தீர்வினைக் காண முற்பட்டவர்கள், வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை நிறைவுசெய்து, அடுத்த கட்டப் போராட்டத்துக்கான அத்திவாரத்தை இட்டுச்சென்றார்கள். அதற்குப் பின் ஆயுதங்கள் ஏந்தி எமக்கான இறைமையுள்ள நாட்டினை தமிழீழ விடுதலைப் புலிகள் கட்டி எழுப்பினார்கள். 2009ம் ஆண்டு அவ்வரசு நடைமுறை ரீதியாக அழிக்கப்பட்டாலும், அவ்வரசு எமது நினைவுகளில் நிலைத்து நிற்குறது. ஆகையால் எமது போராட்டத்தின் தொடர்ச்சி அவ்வரசினூடாக தொடரவேண்டும்.

சர்வதேசத்தினதோ அல்லது பிராந்தியத்தினதோ நலன்களுக்கு இசைவாக செல்லத் தேவையில்லை. அது போன்று நிலைமாறுகால நீதியினூடாகவோ  இலங்கை அரசினூடாகவோ  செல்லத் தேவையில்லை. ஆனால் இப்போதுள்ள நிலைமையில் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வாதாகக் கூறும் பல தரப்பினர் இதனையே செய்கின்றனர். இதனை முறியடிக்க வேண்டும் என்பதற்காக அடுத்த தலைமுறைக்கு எமது அரசின் வரலாற்றினைச் சொல்லியாக வேண்டும்.

கேள்வி – இந்த நூல் உள்ளடக்கியிருக்கும் முக்கியமான விடயங்களாக நீங்கள் எவற்றைப் பார்க்கிறீர்கள் ?

பதில் –  நாம் இங்கும் ஒளிப்படச் சான்றுகளை முக்கியமானவையாகக் கருதுகிறோம். ஏனெனில் ஒரு விடயத்தை  நாம் எந்தளவுக்கு நன்றாக எழுத்தில் கொண்டு வந்தாலும், அதனைக் காட்சிப் படுத்தாவிடின், அது முழுமையானதாக இருக்காது. அது போல இவை முக்கியமானதாக எமனுக்குப் படுகின்றன. அத்துடன்  தமிழீம் தொடர்பான ஒளிப்படங்கள், மற்றும் ஆவணங்கள் திட்டமிட்ட வகையில் இல்லாமல் செய்யப்படும் இந்த வேளையில் இவ்விடயத்தை நாம் முக்கியமானதாகக் கருதுகிறோம்.a 1 தமிழீழ நடைமுறை அரசு, தமிழர்களின் வரலாற்றில் அழியாத இடம்பிடிக்க வேண்டும் -அக்கினிப் பறவைகள் அமைப்பு

கேள்வி- இந்த எமது நூலின் மூலம் அனைத்துலக சமுகத்திற்கு என்ன செய்தியை கொண்டு செல்கிறீர்கள்? உலகத் தமிழர்களுக்கு இந்த நூல் எந்த வகையில்  முக்கியமானது?

பதில் –   2009ம் ஆண்டு சர்வதேசத்தின் வல்லாதிக்க சக்திகளும் மற்றும் பிராந்திய வல்லரசும் எமக்கு ஒரு தெளிவான விடயத்தினை சொல்லியிருக்கின்றன. அவர்களின் நலன்களுக்கு பாதகம் என்று கருதினால் அவர்கள் எந்த விளிம்புவரை செல்வார்கள் என்பதினை அவர்கள்  உணர்த்தியுள்ளார்கள். ஒரு தசாப்தத்துக்குப்பின், போராட்டத்தின் அடுத்த தலைமுறையினராகிய நாம் இந்நூல் மூலம் சொல்ல விரும்பும் செய்தி என்னவெனில், “இவர்கள் என்ன செய்தாலும் தமிழிறைமை என்னும் கோட்பாடு அழிக்கப்பட முடியாத ஒரு விடயமாகும்” என்பதாகும்.

உலகத் தமிழர்களுக்கு நாம் சொல்ல விரும்பும் செய்தி என்னவெனில், சேரர், சோழர், பாண்டியர், தஞ்சாவூர் கோயில் என்று  நாம் பெருமைகொள்வது தவறல்ல. ஆனால் எம்முடைய வாழ்நாளிலே எமது கண்ணுக்கு முன்னால் மலர்ந்து பின்பு அழிந்த இந்நடைமுறை  அரசு,  தமிழர்களின் வரலாற்றில் அழியாத இடம்பிடிக்க வேண்டும். ஏனெனில் இவ்வரசை நிறுவு வதற்காகவும், இறுதியில் இவ்வரசை பாதுகாப்பதற்காகவும்  முழு அகிலத்தையே எதிர் கொண்ட தமிழர்களின் வரலாறு மறக்கப்பட முடியாத ஒன்றாகும்.

கேள்வி: தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை எமது அடுத்த தலை முறைக்கு  கடத்தும் ஓரு உந்து சக்தியாக இந்த நூல் விளங்குமா?

பதில் – நிச்சயமாக. தமிழர் இறைமையை, தமிழீழ ஆட்புல ஒருமைப்பாட்டை கருத்தியலாக மட்டும் காவாமல் நடைமுறை ரீதியாகவும் நிகழ்த்திக்காட்டிய நீண்ட வரலாறு இந்த நூலில் ஒவ்வொரு அத்தியாயமாக ஆவணப் படுத்தப்பட்டுள்ளது. இவற்றை எமது இளைய தலைமுறை  விளங்கிக் கொள்ளும் போது  தேசம் தொடர்பான பற்றும் விடுதலைக்காக உழைக்க வேண்டும் என்ற எண்ணமும் இயல்பாகவே ஏற்படும்.a 2 தமிழீழ நடைமுறை அரசு, தமிழர்களின் வரலாற்றில் அழியாத இடம்பிடிக்க வேண்டும் -அக்கினிப் பறவைகள் அமைப்பு

கேள்வி – புலம்பெயர் இளைய தலைமுறை பல்வேறுபட்ட  நாடுகளில் பல்வேறு மொழிகளைப் பேசும் ஒரு சமூகமாகக் காணப்படுகிறது. இந்தநிலையில் ஆங்கிலம் தவிர்ந்த ஏனைய மொழிகளிலும் இந்த நூலின் தேவை உள்ளதாக நீங்கள் உணரவில்லையா?

பதில் – நாம் அதனை நன்கு உணர்ந்தே உள்ளோம். இதுதொடர்பாக அக்கறையெடுத்துச் செயற்படுவோம்.

கேள்விஇந்த நூல் தொடர்பான வரவேற்பு மற்றும் இது பற்றிய கருத்துக்கள்  எவ்வாறு உள்ளன?

பதில் – இந்நூலுக்குக் கிடைக்கும் வரவேற்பினை  நாம் எதிர்பார்க்கவில்லை. குறிப்பாக இளந்தலைமுறையினரிடம் இருந்து பலமான வரவேற்புகள் கிடைக்கின்றன. ஏனெனில் அவர்கள் இந் நடைமுறை அரசு தொடர்பாக கேள்விப்பட்டு இருக்கின்றனர். ஆனால் அவர்களுக்கான போதுமான தகவல்கள் இதுவரை  எவராலும் கொடுக்கப்படவில்லை. அத்தருணத்தில் இந்நூல் அவ் வெற்றிடத்தை நிறப்பியுள்ளது. தவிர வெளிநாட்டவர்கள் கூட இந்நூல்  பற்றிய தமது  நேரியல் கருத்துக்களை பதிவுசெய்துள்ளார்.WhatsApp Image 2019 05 16 at 20.11.20 தமிழீழ நடைமுறை அரசு, தமிழர்களின் வரலாற்றில் அழியாத இடம்பிடிக்க வேண்டும் -அக்கினிப் பறவைகள் அமைப்பு

கேள்வி – எவ்வாறு இந்த நூலை எவ்வாறு பெற்றுக்கொள்ள முடியும்? 

பதில் – இன்று (19.05.19) சுவிஸ் நாட்டில் இந்நூல் வெளியிடப்பபடுகிறது. அதுபோன்று வேறு நாடுகளிலும் வெளியிடுவதற்கான வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அக்கினிப் பறவைகள் அமைப்பின் இணையத்தளத்தின் மூலம், அந்நிகழ்வுகளின் விபரங்களை, வெளிவந்தவுடன் அறிந்து கொள்ளலாம்.

கேள்வி – இளைய தலைமுறையினராகிய நீங்கள் புலம்பெயர் ஈழத்  தமிழர் சமூகத்திற்கு என்ன கூற விரும்புகிறீர்கள்?

– எமது போராட்டம் ஒரு தேசிய விடுதலைப் போராட்டமாகும். நாம் எமது தேசிய அடையாளத்தினை மறைப்பதன் மூலம் அல்லது வேறு நாட்டவர்களுக்காக இலங்கையின் அடையாளத்தினைத் தழுவதின் மூலம், எமது போராட்டத்தின் ஆன்மாவினை நாமே சிதைக்கிறோம். இதனை நாம் தவிர்த்து, நாம் ஈழத்தமிழர்கள் மற்றும் எம்முடைய தாயகமானது தமிழீழம் என்பதினை தெளிவாக சொல்ல வேண்டும். அதுவே எமது விடுதலைப் போராட்டத்தின் அடுத்த பரிமாணத்துக்கான முதல் அடியாகும்.

அனைத்துலகத்துக்கு ஈழத்தமிழரின் இறைமையினதும் தேசியத்தினதும் வலிமையினை வெளிப்படுத்தும் தளமாகத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 297

சிறிலங்காவின் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான 2024ம் ஆண்டுக்கான தேர்தல் செப்டெம்பர் 21 இல் நடைபெறுமென சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில் ஈழத்தமிழர்கள் இந்த ஜனாதிபதி தேர்தலை தங்கள் இறைமையையும் ஒருமைப்பாட்டையும் உறுதிப்படுத்த எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதே இன்று தாயகத்திலும் புலத்திலும் எழுந்துள்ள கேள்வியாக உள்ளது.
சிறிலங்காவின் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறைமை விகிதாசாரப்பிரதிநிதித்துவம் என்னும் இரண்டையும் 1978ம் ஆண்டு சிறிலங்கா அரசியலமைப்பில் அறிமுகம் செய்த இன்றைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவின் அரசியல் குருவும் கிட்டிய குடும்ப உறுப்பினருமான முன்னாள் சிறிலங்கா ஜனாதிபதி ஜே. ஆர் ஜயவர்த்தனா, இவற்றைப் பயன்படுத்தியே ஈழத்தமிழர்களின் இறைமையை ஒடுக்கி அவர்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தைப் பிரிவினையென்றும் அவர்களின் உயிரையும் உடமைகளையும் நாளாந்தவாழ்வையும் சிறிலங்காவின் இனஅழிப்பு அரசியலில் இருந்து பாதுகாக்கும் சனநாயகப் போராட்டங்கள் ஆயுத எதிர்ப்புப் போராட்டங்கள் அனைத்தையும் பயங்கரவாதம் எனவும் அரசியலமைப்பால் வரைவுபடுத்தி 1979ம் ஆண்டு முதல் இன்று வரை 45 ஆண்டுகள் பயங்கரவாதத் தடைச்சட்டத்தாலும் மக்கள் மேலான யுத்தத்தாலும் ஈழத்தமிழினத்தைத் தேசமாகவே இனஅழிப்பு செய்யும் சிறிலங்காவின் அரசியலையும் 1983ம் ஆண்டின் 6வது அரசியலமைப்புத் திருத்தத்தால் ஈழத்தமிழர்கள் தாங்கள் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதலாக இன்று வரை தொன்மையும் தொடர்ச்சியும் கொண்ட இறைமையுடன் தங்கள் வரலாற்றுத் தாயகத்தில் வாழ்வதை மறுத்து அவர்களின் தாயகம் தேசியம் தன்னாட்சி குறித்த எந்த எண்ணத்தையோ சொல்லையோ செயலையோ பிரிவினையென்று தேசத்துரோகக் குற்றமாகவும் சட்ட ஆட்சியையும் உருவாக்கினார்.
இந்நிலையில் இன்று இந்த ஈழத்தமிழர்களை அரசியல் ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் அவர்களின் அரசியல் உரிமைக்கான எந்தச் செயற்பாட்டையும் இனஅழிப்பு இனத்துடைப்பு பண்பாட்டு இனஅழிப்பு என்னும் மூவகைப்பட்ட அனைத்துலகக் குற்றச் செயல்களால் தடுத்து நிறுத்திக் கொண்டு அதனைச் சிறிலங்காவின் இறைமையையும் ஒருமைப்பாட்டையும் பாதுகாக்கும் தேசிய பாதுகாப்பு நடவடிக்கையென உலகுக்கு நியாயப்படுத்தி வரும் அரசியல் முறைமைக்கான அரசுத் தலைவர் தேர்தலாகத்தான் 2024 சிறிலங்கா ஜனாதிபதி தேர்தலும் வருகிறது. இந்நிலையில் பிராந்திய மேலாண்மையான இந்தியாவும் சிறிலங்காவின் இறைமையையும் ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பதே தனது முதன்மை நோக்கு என்று முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி அவர்களால் ஈழத்தமிழர்களின் பாதுகாப்புக்கு என ஆயுதமும் படைப்பயிற்சியும் இந்தியாவில் அளித்து ஊக்குவிக்கப்பட்ட ஈழத்தமிழர் தேசிய விடுதலைப்போராட்டத்தின் முதன்மை நோக்கான ஈழத்தமிழர்களின் தேசிய பாதுகாப்பு என்பதை உறுதிப்படுத்தும் தனது பொறுப்பை துறந்து 1987 சிறிலங்கா இந்திய உடன்படிக்கையின் பின் இன்று வரை செயற்படும் நிலையில் அமெரிக்காவும் மேற்குலக நாடுகளும் இந்தியாவின் சந்தை மற்றும் கூட்டாண்மை பங்காண்மை தேவைகள் கருதி ஈழத்தமிழரின் தேசியப் பிரச்சினையை சிறிலங்காவின் இறைமைக்குட்பட்ட சமுகம் ஒன்றின் பிரச்சினை என்ற பார்வையில் அனைத்துலகச் சட்டங்களையும் அமைப்புக்களையும் நெறிப்படுத்துவதுடன் சிறிலங்காவுக்கான படைபலத்தை அதிகரிப்பதற்கான எல்லா செயற்பாடுகளையும் நிதி உதவிகளையும் இன்று வரை அளித்து வருகின்றன.
இதனால் இந்தியாவும் அமெரிக்காவும் மேற்குலகநாடுகளும் இன்றைய சிறிலங்காவின் ஜனாதிபதி தேர்தலை சிறிலங்கா அரசாங்கத்தின் உறுதிப்பாட்டைப் பலப்படுத்தும் சனநாயக வழியாகவே வரவேற்று சிறிலங்காவுக்கு அதனுடைய பாதுகாப்பை படைநிலையிலும் பணநிலையிலும் உறுதிப்படுத்த தாங்கள் வகுத்தளித்த அனைத்துலக நாணய நிதியம் உலக வங்கி ஆசிய அபிவிருத்தி வங்கி உட்பட்ட அனைத்துலக நிதிக்கட்டமைப்புக்கள் வழி உச்சக்கட்ட உதவிகளை வழங்கி வருகின்ற நிலையில் அதனைத் தாம் விரும்பியவாறு தொடர்ந்தும் முன்னெடுக்கும் சிறிலங்கா அரசுத் தலைவர் இந்த ஜனாதிபதி தேர்தல் மூலம் தெரிவாக வேண்டுமென்று உறுதியாகச் செயற்பட்டு வருகின்றனர். இந்நிலையில் சிறிலங்காவுக்கு அதிக கடன் அளித்துள்ள நாடுகளான சீனாவும் இந்தியாவும் யப்பானும் தங்கள் கடனுதவியை இலங்கைத் தீவின் இயற்கை வளங்களையும் மனித வலுவையும் தங்களுடைய சந்தை மற்றும் பாதுகாப்புத் தேவைகளுக்கு உச்சமாகப் பயன்படுத்தும் பொருளாதார முறைமைகளை முன்னெடுக்கும் சிறிலங்கா அரசுத் தலைமையைத் தொடர்ந்து பேணும் வகையில் இந்தச் சிறிலங்கா ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்கின்றன.
மக்களால் பாராளுமன்ற உறுப்பினராகக் கூட தேர்ந்தெடுக்கப்படாது 1978ம் ஆண்டு அரசியலமைப்பின் விகிதாசாரப் பிரதிநிதித்துவப் பட்டியல் முறை மூலம் தேசிய பட்டியல் வழியாக நியமனம் பெற்று ஒரே ஒரு உறுப்பினராக மட்டும் இருந்து கொண்டு அதே வேளை முன்னாள் சிறிலங்கா ஜனாதிபதி கோத்தபாய ராசபக்சாவை அரகலிய மக்கள் போராட்டத்தின் மூலம் சிங்கள மக்கள் வெளியேற்ற எடுத்த நடடிவடிக்கைகளில் மகிந்த-ராசபக்ச குடும்பத்தின் பாதுகாவலராகத் தன்னை முன்னிலைப்படுத்தி அனைத்துலக அனுசரணைகளை ராசபக்ச குடும்பத்துக்கு பெற்றுக் கொடுக்கும் முகவர் ஜனாதிபதியாக 2022 இல் பதவியேற்ற ரணில் விக்கிரமசிங்கா இரண்டு வருடங்களில் அதனை நிறைவேற்றிய போதிலும் சிங்கள மக்களால் கூட ஏற்றுக்கொள்ளப்படாத தலைவராக எந்தக் கட்சியாலும் தான் மிகநீண்டகாலம் அரசியல் நடாத்திய ஐக்கிய தேசியக் கட்சியாலும் கூடப் புறக்கணிக்கப்பட்ட நிலையில் தனிவிருப்ப வேட்பாளாராக ஜனாதிபதி தேர்தலில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளமை சிங்கள மக்களிடையிலும் தலைமை வெற்றிடம் உள்ளதை உலகுக்கு உறுதிப்படுத்தியுள்ளது.
இந்தத் தலைமை வெற்றிடம் வெளிப்பட்டு சிறிலங்காவுடன் கடள் மறு சீரமைப்புச் செய்துள்ள கடன் கொடுத்தவர்கள் அதனை மீளப்பெறுவதற்கு இடையில் மக்கள் ஆணை பெற்ற ஜனாதிபதியொருவரை நியமிக்க வேண்டும் என்ற தேவையே இன்றைய ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு. எவர் ஜனாதிபதியாக வந்தாலும் சிங்கள பௌத்த பேரினவாதத்தை ஒன்றிணைக்கும் பௌத்த மகாசங்கத்தினரின் நெறிப்படுத்தலில் அவர் ஈழத்தமிழின அழிப்பிலும் அனைத்துலக உதவிகளைப் பெறுவதிலும் பொதுத்தன்மையுடன் செயற்படுவார் என்பதால் யார் வந்தாலும் ஏதோ ஒருவகையில் ரணில் விக்கிரமசிங்காவின் அதிகாரக்கட்டமைப்பு மீளவும் உறுதி செய்யப்பட்டு சிறிலங்காவின் வங்குரோத்துப் பொருளாதாரம் அனைத்துலக உதவிகளால் நிலைபெறும் என்பது வெளிப்படையானவொன்று. இதனாலேயே மக்கள் தேசிய முன்னணியின் அநுரகுமர திசநாயக்கா முதன்மை நிலையிலும் தேசிய மக்கள் சத்தியின் சஜித் பிரேமதாசா அடுத்த நிலையிலும் மூன்றாவது நிலையிலேயே ரணில் விக்கிரமசிங்க உள்ள நிலையிலும் உள்ளனர் என்ற கருத்துக் கணிப்பீடுகளுக்கு மத்தியிலும் ஜனாதிபதி தேர்தல் திட்டமிட்டவாறு நடைபெறுகிறது. சிறீமாவோ பண்டாரநாயக்காவின் இடதுசாரிக் கூட்டணி மிகப் பலம்பொருந்திய நிலையில் 1977 தேர்தல் மூலமே ஜே. ஆர் ஜயவர்த்தனா மீளவும் ஐக்கிய தேசியக் கட்சியை ஆட்சிக்குக் கொண்டு வந்து சிறிமாவோ பண்டாரநாயக்காவின் குடியுரிமையைப் பறித்தும் ஈழத்தமிழ் அரசியல் வாதிகளை இந்தியாவுக்கு விரட்டியடித்தும் சிங்கள நாடு பௌத்த சட்டம் சிங்கள ஆட்சி என்ற தத்துவத்தின் மூலம் 12 ஆண்டுகள் ஆட்சி செய்து சிங்கள பௌத்த பேரினவாதத்தையும் மேற்குலகம் சார்ந்த அரசியலையும் மீளவும் உறுதிப்படுத்தியமை இன்று ரணில் விக்கிரமசிங்காவின் இந்தத் தேர்தல் அறிவிப்பை அனுமதித்தமைக்கான முன்னுதாரணமாக உள்ளது. அத்துடன் ரணில் விக்கிரமசிங்கா விடுதலைப்புலிகள் அமைப்பினை பிளவுபடுத்தும் தந்திரோபாயங்களைக் கையாண்டு சிங்களத் தலைமைக்கு மீளவும் வலிமை சேர்த்தது போலவே இன்று ராஜபக்சாக்களின் ஆதரவுடன் பின்பக்கக் கதவால் ஆட்சித்தலைமையை ஏற்று அவர்களுடைய கட்சியையே பிரித்துள்ளார் என்று நாமல் ராஜபக்சா ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
இதே தந்திரோபாயத்தைத் தான் இந்தியக் கூட்டாண்மைக்கும் அமெரிக்கப் பங்காண்மைக்கும் சீன நட்பாண்மைக்கும் ரஸ்ய மத்திய கிழக்கு நாடுகள் உறவாண்மைகளுக்கும் எல்லாநாடுகளின் சிறிலங்காவுடனான தொடர்பாண்மைக்கும்; ஈழத்தமிழரின் தாயகத்தைச் சூழவுள்ள இந்துமாக்கடல் பகுதியிலும் நிலப்பகுதியிலும் ரணில் கையாண்டு நில இணைப்பு பொருளாதார இணைப்பு மீண்டெழு எரிசக்திகளின் இணைப்பு காலநிலைப் பாதுகாப்பு இணைப்பு எனப் பலவழிகளில் அனைத்துலக தளமாக இலங்கைத் தீவை மாற்றி அந்த அந்த நாடுகளின் மூலமான நன்மைகளைப் பெற்று ஈழத்தமிழர் மேலான மக்கள் மேலான யுத்தத்தை 1972 முதல் அரைநூற்றாண்டுக்கு மேலாக நடாத்தி ஏற்படுத்திய படுகடன்களால் ஏற்பட்ட வங்குரோத்து அரசியலில் இருந்து தப்பிக்கும் தற்காலிக பொருளாதாரச் செயற்பாட்டில் வெற்றி கண்டுள்ளார் என்பதே ரணிலின் அனைத்துலக அரசியல் குறித்த மதிப்பீடாக உள்ளது.
இந்நிலையில் ஈழத்தமிழர்கள் தமது தாயகம் மேலான இறைமையின் உண்மையையும், தேசிய வலிமை பிராந்திய உலகப் பாதுகாப்புக்குக்கான அடிப்படைத் தேவையென்பதையும் தன்னாட்சி மூலமே அவர்களால் பிராந்திய உலக அமைதிக்கான பங்களிப்பைச் செய்ய இயலும் என்பதையும் இந்தத் தேர்தல் மேடையைப் பயன்படுத்தி பிராந்திய, உலகுக்கு தெளிவுபடுத்துவதே இந்தத் தேர்தலை ஈழத்தமிழர்கள் எதிர்கொள்ளும் முறைமையாக வேண்டும் என்பதே இலக்கின் எண்ணம்.

Tamil News

Ilakku Weekly ePaper 297 | இலக்கு-இதழ்-297-ஜூலை 27, 2024

முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
Ilakku Weekly ePaper 297 | இலக்கு-இதழ்-297-ஜூலை 27, 2024

Ilakku Weekly ePaper 297

Ilakku Weekly ePaper 297 | இலக்கு-இதழ்-297-ஜூலை 27, 2024

Ilakku Weekly ePaper 297 | இலக்கு-இதழ்-297-ஜூலை 27, 2024: இன்றைய மின்னிதழ்; செய்திகள், ஆசிரியர் தலையங்கம், தாயகத்தளம், மலையகம், இந்தியத்தளம், புலம்பெயர்தளம், அனைத்துலகத்தளம் ஆகிய தளங்களை தாங்கி வெளியாகி உள்ளது.

கீழ் காணும் ஆக்கங்களைத் தாங்கி வெளியாகி உள்ளது

  • இவ்வார இலங்கை மற்றும் உலக நிகழ்வுகள் சில ஈழத்தமிழர் இறைமையைப் பாதுகாப்பதற்கான வழிகளைக் காட்டுகின்றன – ஆசிரியர் தலையங்கம்
  • மொட்டுவை பிளவுபடுத்திய ரணில் குழம்பிப்போயுள்ள ராஜபக்ஷக்கள்! – அகிலன்
  • சிங்கள வேட்பாளர்களுடன் பேசி முடிவு எடுக்கலாமா?-செவ்வி ஐங்கரநேசன் தலைவர், தமிழ்த் தேசிய பசுமை இயக்கம்
  • வேலையில்லாப் பட்டதாரிகளின் தொடரும் போராட்டம்…-ஹஸ்பர் ஏ. ஹலீம்
  • இருப்பை உறுதிப்படுத்தும் மக்களின் வழிபாட்டு முறைகள் …- து.கௌரீஸ்வரன்
  • பொதுவரையறைக்குள் செயற்பாடுகள் அவசியம் – துரைசாமி நடராஜா
  • மறந்து போனதா கறுப்பு யூலை?- தோழர் தியாகு, பொதுச் செயலாளர், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்
  • நெருப்புக் குழந்தைகள் நூல் வெளியீட்டு விழா
  • கல்வி, தாய்மொழி,தேச விடுதலை (ஃபின்லாந்து வரலாற்றுப் பின்னணி) – முனைவர் விஜய் அசோகன், கல்வியாளர்
  • இந்திய கடற்படை சந்தித்த பேரிழப்பு- வேல்ஸில் இருந்து அருஸ்

சென்ற வார மின்னிதழை முழுமையாக படிக்க கீழ் உள்ள இணைப்பை அழுத்தவும்

 

 

தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையை ஐரோப்பிய ஒன்றியம் மேலும் நீடித்துள்ளது – இலங்கை தெரிவிப்பு

தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையை ஐரோப்பிய ஒன்றியம் மேலும் ஆறுமாதங்களிற்கு நீடித்துள்ளது  என இலங்கையின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய பேரவை பயங்கரவாதத்திற்கு எதிராக போராடுவதற்காக பட்டியலில் இணைக்கப்பட்ட அமைப்புகள் குறித்து மீளாய்வு செய்துள்ளது என தெரிவித்துள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சு மேலும் ஆறுமாதங்களிற்கு தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்டிருக்கும் என தெரிவித்துள்ளது.

தடைசெய்யப்பட்ட அமைப்புகள் நபர்களின் நிதிகளை முடக்கலாம் என தெரிவித்துள்ள இலங்கையின் வெளிவிவகார அமைச்சு அந்த அமைப்புகள் தனிநபர்களிற்கு நிதி வழங்குவதும் தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

வெடுக்குநாறி மலை ஆலய பூசகரிடம் பயங்கரவாத புலனாய்வு பிரிவு விசாரணை

வவுனியா வெடுக்குநாறி ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தின் பூசகரான மதிமுகராசாவை பயங்கரவாத புலனாய்வு பிரிவின் வவுனியா அலுவலகத்தினர் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.

நேற்று  வவுனியாவில் அமைந்துள்ள பயங்கரவாத புலனாய்வு பிரிவுக்கு வருமாறு கிராம சேவையாளர் ஊடாக விடுக்கப்பட்ட அழைப்பின் பிரகாரம் மதிமுகராசா பயங்கரவாத புலனாய்வு பிரிவின் வவுனியா அலுவலகத்திற்கு சென்று இருந்தார்.

அங்கு கடும் விசாரணைகள் இடம் பெற்றதோடு வெடுக்குநாறி ஆலயம் தொடர்பான பல்வேறு விடயங்களும் அவரிடம் வினவப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த சிவராத்திரி தினத்தில் வெடுக்குநாறி ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தில் பூஜை வழிபாட்டின் போது பொலிசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் பெரும் சர்ச்சை ஏற்பட்ட நிலையில் பொலீசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டவர்களில் ஆலய பூசகரும் உள்ளடங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி தேர்தலுக்கான நிதியை வழங்க திறைசேரி தயார் : நிதியமைச்சு

தேர்தல் ஆணையாளரின் கோரிக்கைக்கு அமைய எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்குத் தேவையான நிதியை வழங்க திறைசேரி தயாராக இருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்தார்.

கடந்த வரவு – செலவுத் திட்டத்தில் தேர்தல் செலவுகளுக்காக 1000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், பணப்புழக்கத்திற்கு இடையூறு ஏற்படாத வகையில் நிதியை வழங்க ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு வாக்குச்சீட்டு அச்சிடுதல், பாதுகாப்பு, எரிபொருள் மற்றும் வாக்குப் பெட்டிகள் போன்ற அவசர தேவைகளுக்காக 80 கோடி ரூபாய் செலவாகும் என தேர்தல் ஆணையாளர் அலுவலகம் மதிப்பிட்டுள்ள நிலையில், அதனை வழங்க திறைசேரி தயாராக உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கை ஜனாதிபதித் தேர்தல்: சுயாதீன வேட்பாளராகக் களமிறங்கும் ரணில்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுயாதீன வேட்பாளராகக் களமிறங்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடும் ரணில்  விக்கிரமசிங்கவுக்கு கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளன.

ஜனாதிபதியின் சட்டத்தரணி ரொனால்ட் சி பெரேராவினால் குறித்த தொகை வைப்பு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அதன்படி, ஜனாதிபதி சார்பாக அவரது சட்டத்தரணி தேர்தல் ஆணைக்குழுவில் சுயாதீன வேட்பாளருக்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை ஜனாதிபதி தேர்தல்- அமெரிக்காவின் எதிர்பார்ப்பு: ஜூலிசங் கருத்து

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல்கள் செப்டம்பர் 21ம் திகதி நடைபெறும் என்ற  தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவிப்பை வரவேற்கின்றோம் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலிசங் தெரிவித்துள்ளார்.

இது ஜனநாயகத்திற்கான இலங்கையின் நீண்டகால அர்ப்பணிப்பை உறுதி;ப்படுத்துகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மக்கள் தங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்கும் விதத்தில் அவர்களை வலுப்படுத்தும் நீதியான சுதந்திரமான தேர்தலை எதிர்பார்க்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் திறந்த வெளி நகர மான் பூங்கா..!

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள திருகோணமலை மான் பூங்கா உலகின் கடற்கரையோரத்தில் மிகவும் இயற்கையான சூழலில் அமைந்துள்ள  திறந்த நகர மான் பூங்காவாக கொண்டாடப்படுகிறது.
மான்களின் இயற்கையான வாழ்விடத்தை ஆதரிக்கும் வகையில் பூங்காவின் சூழல் பராமரிக்கப்பட்டு, அவை சுதந்திரமாக சுற்றித் திரிவதற்கும் பார்வையாளர்களுடன் நிலையான முறையில் தொடர்புகொள்வதற்கும் அனுமதிக்கிறது.
20240725 080828 இலங்கையில் திறந்த வெளி நகர மான் பூங்கா..!
திருகோணமலை மான் பூங்கா தனிச்சிறப்பு வாய்ந்தது, இது திறந்த நகர மான் பூங்காக்களில் அதிக மான்களைக் கொண்டுள்ளது, திருகோணமலை நகரம் முழுவதும் 1,000 க்கும் மேற்பட்ட மான்கள் பரவியுள்ளன. இந்த அதிக எண்ணிக்கையிலான மான்கள் ஒரு தனித்துவமான அம்சமாகும், இது உலகெங்கிலும் உள்ள மற்ற ஒத்த பூங்காக்களிலிருந்து தனித்து நிற்கிறது.
பூங்காவில்  உணவுக் கடை உள்ளது, பார்வையாளர்களுக்கு பல்வேறு உணவு விருப்பங்களை வழங்குகிறது. இது பூங்காவின் சுற்றுச்சூழல் நட்பு கருப்பொருளுடன் ஒத்துப்போகிறது, கிடைக்கும் உணவு நிலையானது மற்றும் சுற்றுச்சூழல் உணர்வுடன் இருப்பதை உறுதி செய்கிறது. நாரா மான் பூங்காவுடன் ஒப்பிட்டு பார்க்கையில், ஜப்பானில் உள்ள நாரா மான் பூங்காவில், மான்களுக்கு அனுமதிக்கப்பட்ட ஒரே உணவான குறிப்பிட்ட சத்தான பிஸ்கட்டுகளை அரசு தயாரித்து விற்பனை செய்யும் இடத்தில், திருகோணமலை மான் பூங்காவில் இதுபோன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை. நாராவில், இந்த பிஸ்கட்கள் விலை அதிகமாகவும் உள்ளது, என்றாலும் மான்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை உறுதிப்படுத்துகிறது அரசாங்கம். ஆனால்  விலங்குகளுக்கு இயற்கையான உணவுகளை கொடுப்பதே அவற்றின் வாழ்வியலுக்கு சிறந்தது.
20240725 080856 இலங்கையில் திறந்த வெளி நகர மான் பூங்கா..!
திருகோணமலை மான் பூங்கா தனித்து நிற்கிறது ஏனெனில் பார்வையாளர்கள் நுழைவதற்கு கட்டணம் இல்லை. இது பரந்த அளவிலான மக்களுக்கு அணுகக்கூடியதாக ஆக்குகிறது, மேலும் மான்கள் மற்றும் அவற்றின் இயற்கைச் சூழலை எந்த நிதித் தடையும் இல்லாமல் அதிக தொடர்பு மற்றும் பாராட்டுதலை ஊக்குவிக்கிறது.
இந்த ஒவ்வொரு அம்சமும் திருகோணமலை மான் பூங்காவின் தனித்துவமான அம்சங்களை எடுத்துக்காட்டுகிறது, இது இயற்கை மற்றும் வனவிலங்கு ஆர்வலர்களுக்கு ஒரு தனித்துவமான மற்றும் கவர்ச்சிகரமான இடமாக அமைகிறது.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் நடக்கும் வன்முறைகள்: அமெரிக்கா பயண எச்சரிக்கை

அமெரிக்காவின் பயண ஆலோசனை அறிவுரை அமெரிக்கர்கள் இந்தியாவில் வடகிழக்கு மாநிலங்களுக்கு பயணம் செய்வதாக இருந்தால் மறுபரிசீலனை செய்யும் நிலையை 3-ல் வைத்துள்ளது. இதற்கிடையில், மணிப்பூர் நிலை 4-ன் கீழ் வருகிறது. இது இங்கே பயணம் செய்யாதீர்கள் என்பதைக் குறிப்பிடுகிறது.

இந்தியாவில் பயணம் செய்யும் அமெரிக்க அரசு ஊழியர்கள் சிக்கிம் மற்றும் அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்குச் செல்வதற்கு முன், முன்அனுமதி பெற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

அமெரிக்காவின் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்ட பயண ஆலோசனையில், அவ்வப்போது நடக்கும் வன்முறைச் செயல்கள் காரணமாக இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுக்கு பயணம் செய்வதை மறுபரிசீலனை செய்ய அமெரிக்கா தனது நாட்டு மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.

யாழில் ஊடகவியலாளர் ஒருவர் திடீரென உயிரிழப்பு

முன்னாள் போராளியும், ஊடகவியலாளரும், வவுனியா பிரஜைகள் குழுவின் ஊடகப் பேச்சாளரும், அரசியல் சமூக செயற்பாட்டாளருமான ஈழம் சேகுவேரா (இசைப்பிரியன்) என அழைக்கப்படும் அ.சேகுவாரா நேற்று வியாழக்கிழமை (16) காலமானார்.

யாழ்ப்பாணம் ஆரியகுளம் பகுதியில் உள்ள வாடகை வீடொன்றில் நண்பருடன் தங்கியிருந்த வேளை காலை நெஞ்சு வலிப்பதாக நண்பரிடம் கூறி சில நிமிடங்களில் மயங்கி சரிந்து உயிரிழந்துள்ளார்.

மரணத்திற்கான காரணம் தெரியவராத நிலையில், உடற்கூற்று பரிசோதனைக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சுயாதீன ஊடகவியலாளராகவும், பத்தி எழுத்தாளராகவும், அரசியல் விமர்சகராகவும், கலைஞனாகவும் பல்துறைகளிலும் பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.