Home Blog Page 1875

இலங்கைத்தீவில் இம்முறை சித்திரை புத்தாண்டு..?

ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்பட்டு வரும் சித்திரை புத்தாண்டு கொண்டாட்டத்தை போல இவ்வருடம் எந்தவொரு நிகழ்வும் இல்லை.

கொரோனா தொற்றின் தாக்கமே இதற்கான காரணமாகும்.

புத்தாண்டில் கிராமங்களுக்கு செல்லும் மக்களின்றி கொழும்பு நகரம் வெறிச்சோடி காணப்படுகிறது.

ஏனைய புத்தாண்டு நாட்களைப் போலன்றி இன்று கொழும்பு பிரதான பேருந்து நிலையம், சேவையின்றி நிறுத்தப்பட்ட பேருந்துகளுடன் காணப்படுகிறது.

அதேபோல, கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் ஒரு புகையிரதம் கூட பார்வைக்கு தென்படாமல் இருக்கிறது.

கொரோனா தொற்றின் காரணமாக ஆடை வியாபாரிகள், பட்டாசு விற்பனையாளர்கள், இனிப்புக்கள் மற்றும் பானை தாயாரிப்பாளர்கள் என அனைவரும் பொருளாதார ரீதியாக பெரும் இன்னல்களுக்கு முகம்கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கோவிட்-19 – இறப்பு எண்ணிக்கை 114,098 ஆக உயர்ந்தது

கொரோனா வைரசின் தாக்கத்தினால் உலகில் உள்ள நாடுகள் அதிக உயிர் மற்றும் பொருளாதார இழப்புக்களை சந்தித்து வருவது நாம் அறிந்ததே இந்த நிலையில், இதுவரையில் 114,098 பேர் பலியாகியுள்ளதுடன், 1,851,011 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 422,566 பேர் குணமடைந்துள்ளனர்.

அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இறந்தவர்களின் விபரம்:

அமெரிக்கா – 22,036

இந்தாலி – 19,899

ஸ்பெயின் – 17,209

பிரான்ஸ் – 14,393

பிரித்தானியா – 10,612

ஈரான் – 4,474

சீனா – 3,339

நெதர்லாந்து – 2,737

ஜேர்மனி – 3,022

பெல்ஜியம் – 3,600

சுவிற்சலாந்து – 1,106

கனடா – 713

இந்தியா – 331

சுவீடன் – 899

வயதானவர்களை 2021 வரையிலும் தனிமைப்படுத்த முயற்சி

கோவிட்-19 வைரசில் இருந்து தம்மை பாதுகாக்க வேண்டுமெனில் வயதானவர்கள் எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு வரையிலும் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உசுலா வொன் டெர் லெயன் இன்று (12) தெரிவித்துள்ளார்.

ஜேர்மனின் ஊடகம் ஒன்றிற்கு அவர் வழங்கிய நேர்காணலில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

வைரசில் இருந்து எம்மை பாதுகாப்பதற்குரிய தடுப்பு மருந்து உற்பத்தி செய்வதற்கு ஒரு வருடம் எடுக்கும் என பல நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். எனவே அதனை பெறும் வரை நாம் வயதானவர்களை தனிமைப்படுத்த வேண்டும்.

அவ்வாறு தனிமைப்படுத்துவது கடினமானது என்பதை நான் அறிவேன் ஆனால் இது வாழ்வா அல்லது சாவா என்பதை தீர்மானிக்கும் முடிவு. எனவே நாம் ஒழுக்கமாகவும், அமைதியாகவும் இருத்தல் வேண்டும். இந்த வருடத்திற்குள் ஐரோப்பிய நாடுகளில் உள்ள ஆய்வுகூடங்கள் இந்த மருந்தை கண்டுபிடித்து விடுவார்கள் என மேலும் தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலையை கையாள்வது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றது. ஐரோப்பிய ஒன்றியத்தின் விஞ்ஞான ஆய்வுப் பிரிவின் தலைவர் அண்மையில் தனது பதவியில் இருந்து விலகியிருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இலக்கு-இதழ்-73-ஏப்ரல்12, 2020

முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அழுத்தவும்:

இலக்கு-இதழ்-73-ஏப்ரல்12, 2020

கொரோனா தொடர்பில் வெளியான விசேட வர்த்தமானி அறிவித்தல்

கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்த அல்லது உயிரிழந்தாக சந்தேகிக்கப்படுபவரின் பூதவுடல் தகனம் செய்யப்பட வேண்டும் என அறிவித்து அரசாங்கம் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

சுகாதார மற்றும் சுதேச வைத்திய சேவைகள் அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, சுகாதார சேவை பணிப்பாளர் நாயகத்தினால் விடுக்கப்படும் பணிப்புகளுக்கு அமைய, ஏதேனும் சாத்தியமான உயிரியல் அச்சுறுத்தலைத் தடுக்கும் நோக்கத்திற்கென முழுமையாக எரிவதற்கு ஆகக் குறைந்தது 45 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை 800 க்கும், 1,000க்கும் இடையிலான வெப்ப நிலை தன்மையை கொண்டிருத்தல் வேண்டும்.

அத்துடன், அத்தகயை அதிகாரியின் மேற்பார்வையின்கீழ் முறையான அதிகாரியினால் அங்கீகரிக்கப்படும் சுடலை அல்லது இடத்தில் தகனம் செய்யப்படுதல் வேண்டும் என வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆளெவரும், கொரோனா வைரஸினால் உயிரிழந்துள்ள அல்லது உயிரிழந்துள்ளதாக சந்தேகிக்கப்படும் ஆளொருவரின் பூதவுடலை முறையான அதிகாரியினால் பெயர் குறித்து நியமிக்கப்படும் தகனத்திற்கான அவசிய கடமைகளை பொறுப்பேற்கின்ற ஆட்கள் தவிர்ந்த வேறெவரேனும் ஆளுக்கு கையளித்தலாகாது.

அத்தகைய சுடலை அல்லது இடத்தில் பூதவுடலை கையாளுகின்ற ஆட்களினால் பயன்படுத்தப்படும் உடை மற்றும் மீள பயன்படுத்த முடியாத தனிப்பட்ட பாதுகாப்ப கருவிகள் தகனத்தின்போது சவப்பெட்டியுடன் அவற்றை இடுவதன் மூலம் எரிக்கப்படுதல் வேண்டும்.

மீளபயன்படுத்தப்படக்கூடிய கருவியானது சுகாதார பணிப்பாளர் தலைமை அதிபதியினால் விடுக்கப்படும் பணிப்புகளுக்கு இணங்க முறையாக தூய்மைப்படுத்தலும், கிருமி நீக்கப்படுதலும் வேண்டும்.

பூதவுடலின் சாம்பலானதும், உறவினரின் வேண்டுகோளின் பேரில் அத்தகைய உறவினருக்கு கையளிக்கப்படலாம் என வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்தமானி அறிவித்தலை காண இங்கே அழுத்தவும்

பல்கலைக்கழக நிர்வாக செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பமாகும் திகதி அறிவிப்பு

பல்கலைக்கழக நிர்வாக செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பமாகும் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பல்கலைக்கழக நிர்வாக செயற்பாடுகள் மே மாதம் 4 ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகவுள்ளது.

இதேவேளை இறுதியாண்டு மாணவர்களுக்காக மே மாதம் 11 ஆம் திகதியும் அனைத்து மாணவர்களுக்காக மே மாதம் 18 ஆம் திகதியும் பல்கலைக்கழகங்கள் ஆரம்பமாக உள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது

உழவுஇயந்திரம் தடம்புரண்டதில் இளைஞன் ஒருவர் பரிதாபமாக பலி

முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் உழவுஇயந்திரம் ஒன்று தடம்புரண்டதில் இளைஞன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியை சேர்ந்த நந்தகுமார் கிருபாகரன் வயது 26 என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சிறுபோக நெற்பயிர்ச் செய்கையில் ஈடுபட்டுவரும் குறித்த இளைஞன் விவாசாய நடவடிக்கைக்காக உழவு இயந்திரம் ஒன்றை இன்று காலை வீட்டில் இருந்து பிரதான வீதிக்கு செலுத்திய போது வேகக்கட்டுப்பாட்டை இழந்த நிலையில் உழவுஇயந்திரம் குடைசாய்ந்து விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் மேலதிக விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

ஊரடங்கு உத்தரவை மீறிய 23,519 பேர் கைது.

ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டின் கீழ் இதுவரையில் 23 ஆயிரத்து 519 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, 6,072 வாகனங்களும் காவல்துறையினரால் பறிமுதல் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, பண்டிகைக் காலங்களில் கிராம மட்டங்களில் இடம்பெறும் கலை, கலாசார கொண்டாட்டங்களை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பதில் காவல்துறைமா அதிபர் அனைத்து காவல்நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார்.

கொவிட் 19 வைரஸ் பரவலை தடுப்பதற்காக நாடளாவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இன்று காலை மணிக்கு நிறைவடைந்த 4 மணிநேரத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டின் கீழ் 1,535 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு 385 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

பயம் எம்மை ஆட்கொள்ள அனுமதிக்க வேண்டாம் – புனித ஞாயிறு செய்தி

உலகில் வாழும் கிறிஸ்தவர்கள் புனித ஞாயிறு தினத்தை இன்று கொண்டாடி வருகின்றனர். கொரோன அச்சம் காரணமாக பல ஆராதனைகள் காணொளி ஊடாகவே மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வத்திக்கானில் உள்ள சென் பீற்றேர்ஸ் புனித தேவாலையத்தில் மூடிய கதவுகளினுள் ஆராதனை வழிபாடுகள் பேராயர் பிரான்ஸிஸ் தலைமையில் இடம்பெற்றது. அவர் தனது செய்தியை இணையத்தளம் ஊடாக வழங்கியிருந்தார்.

கடந்த ஆண்டு வத்திக்கனில் இடம்பெற்ற ஆராதனைகளில் 70,000 மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இதனிடையே, இன்றைய நிலையில் பயம் எம்மை ஆட்கொள்ள நாம் அனுமதிக்ககூடாது என பிரித்தானியாவின் கன்ரபெரி பேராயர் ஜஸ்ரின் வெல்பி தெரிவித்துள்ளார்.

church 2020 holy sunday பயம் எம்மை ஆட்கொள்ள அனுமதிக்க வேண்டாம் - புனித ஞாயிறு செய்தி

நெருக்கடியான நிலைகளில் நாம் எவ்வாறு நடக்கவேண்டும் என்பதை தேவாலையங்கள் மக்களுக்கு முன்னுதாரணமாக காண்பிக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மானுடத்தின் எசமான்கள் (பாகம்–01) – தமிழில் ந.மாலதி

உலக அரசிலை புரிந்து கொள்வது சிக்கலானது. பல்கலைக்கழகங்களில் அரசியல் அறிவியலை ஒரு கோணத்தில் கற்பிக்கிறார்கள். அதிகார மையங்களுக்கு ஒவ்வாத கருத்துக்களை இங்கு கற்பிப்பதில் சிக்கல்கள் உள்ளன. ஒரு சில ஆசிரியர்கள் இதையும் மீறி தங்களுக்கு உண்மை என்று தோன்றுவதை கற்பிக்கிறார்கள். இவர்களை போன்றவர்கள் பலகலைக்கழகங்களில் அதிகம் இல்லை.

பேராசிரியர் நோம் சொம்ஸ்கி பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் கற்பிப்பவர் அல்ல. ஆனால் மாணவர்களுடன் பல தசாப்தங்களாக அரசியலை பேசி வருபவர். உலக அரசியலை இவரிடமிருந்து கற்றுக்கொள்வைதையே பல பிரபல சிந்தனையாளர்களும் ஏற்றுக்கொள்கிறார்கள்.

மேலே குறிப்பிட்ட தலைப்பில் பேராசிரியர் நோம் சொம்ஸ்கி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். இதில் இன்றைய உலக அரசியல் பற்றி ஒரு அறிமுகம் தருகிறார். இன்றைய மானுடத்தின் எசமான்கள் யார், இந்த எசமான்களுக்கு இன்று சவாலாக இருப்பவர்கள் யார் என்பதை பற்றி இதில் பேசுகிறார். இவர் கூறிய கருத்துக்கள் பின்வரும் ஐந்து பிரிவுகளாக வெளியிடப்படுகிறது.

1) மேற்குலக அதிகாரத்திற்குள்ள அழுத்தங்கள்

2) இன்றைய கிழக்கு-ஆசியா சவால்கள்

3) இன்றைய கிழக்கு-ஐரோப்பியா சவால்கள்

4) இன்றைய இஸ்லாமிய-உலக சவால்கள்

5) இரண்டாவது சக்தி   என்பனவே இவை.

மேற்குலக அதிகாரத்துக்குள்ள அழுத்தங்கள்

“யார் உலகை ஆளுகிறார்கள்” என்று கேட்டால் நாம் வழமையாக கையாளும் முறையில், அரசுகளையும், முக்கியமாக வல்லரசுகளையும், அதன் முடிவுகளையும்,  அவற்றிற்கிடையிலான உறவுகளையுமே கணக்கிலெடுக்கிறோம். அது முற்றிலும் பிழையில்லை. இருந்தாலும் இவ்வாறு சுருக்கி பார்ப்பதால் நாம் பிழையான விளக்கங்களை ஏற்றுக்கொள்ளும் சாத்தியங்கள் உண்டு என்பதையும் மனம்கொள்ளல் வேண்டும்.

அரசுகளுக்குள்ளேயும் சிக்கலான கட்டமைப்புகள் இருக்கும். இதன் அரசியல் தலைமைத்துவங்கள் எடுக்கும் முடிவுகளில் அரசுகளுக்குள்ளே இருக்கும் அதிகாரபலமுள்ள மையங்கள் அதிக தாக்கம் செலுத்தும். பொதுமக்கள் பெரும்பாலும் ஓரங்கட்டப்படுவார்கள். சனநாயகத்தை மதிக்கும் நாடுகளுக்கும் இது பொருந்தும்.

சனநாயக தன்மைகள் குறைந்த நாடுகளில் இது மேலும் பொருந்தும். மானுடத்தின் எசமான்கள் உண்மையில் யார் என்பதை புறந்தள்ளி உலகை யார் ஆளுகிறார்கள் என்பது பற்றிய உண்மையான புரிதலை நாம் பெற்றுக்கொள்ள முடியாது.main image மானுடத்தின் எசமான்கள் (பாகம்–01) - தமிழில் ந.மாலதி

அடம் சிமித் என்ற பொருளாதார நிபுணர் அவருடைய காலத்தில் (1723-90), மானிடத்தின் எசமான்களை உற்பத்தியாளர்களும் பெரும் விற்பனையாளர்களும் என்று விபரித்தார். இன்றைய காலத்தில் இவர்களை பெரும் பல்தேசிய கம்பனிகளும், பெரும் நிதி நிறுவனங்களும், பெரும் விற்பனை மையங்களும் என்று விபரிக்கலாம். அன்று அடம் சிமித் சொல்லிய மானுடத்தின் எசமான்களின் தாரக மந்திரம்தான் “எல்லாம் எங்களுக்கே. மற்றவர்களுக்கு எதுவுமில்லை” என்பது. வேறு வார்த்தையில் சொல்வதானால் இதுவே ஒருபக்க சார்பான வர்க்கப்போர்.

நாட்டுக்கும் உலகத்திற்கும் கெடுதல் விளைவிப்பது. இன்றைய உலக ஒழுங்கில், மானுடத்தின் எசமான்களின் அமைப்புக்கள் அதீத செல்வத்தையும் அதனால் வரும் அதிகாரத்தையும் கொண்டுள்ளன. செல்வம் சிலரிடம் மட்டும் குவிமையப் படுத்தப்படும் போது சனநாயகம் கருத்தற்று போவகிறது. உலகளாவிய ரீதியில் மட்டுமல்ல உள்நாட்டிலும் இவ்வாறே. இந்த அதிகாரத்தை கொண்டே அவர்கள் தங்கள் அதிகாரத்தை தக்க வைத்து கொள்கிறார்கள். பல வழிகளில் தங்கள் பொருளாதார பலத்தையும் பாதுகாத்து கொள்கிறார்கள்.

சர்வதேச விடயங்களில் ஒரு அரசின் கொள்கையில் தாக்கம் செலுத்துபவைகளை அலசுவதற்கு கணக்கிலெடுக்க வேண்டியவை பற்றி இன்னும் பலவற்றை சொல்லலாம். இருந்தாலும் ஏறத்தாள உண்மைக்கு அண்மையான ஒரு மதிப்பீட்டிற்கு அரசுகளையே அதிகார மையங்களாக கருதி அலசுவோம். அப்படி பார்த்தால் யார் உலகை ஆளுகிறார்கள் என்ற கேள்வியை ஆரயும் போது சில விடயங்கள் உடனடியாக எம்முன்னே வந்து நிற்கும். ஐ-அமெரிக்காவுக்கும் இன்றைய உலக ஒழுங்கிற்கும் சவாலாக ஏழும்பும் சீனா, கிழக்கு-ஐரோப்பாவில் உருவாகி வரும் புதிய பனிப்போர், பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய போர், ஐ-அமெரிக்க மேலாதிக்கமும் அதன் வீழ்ச்சியும் இவற்றில் முக்கிமானவை.rusia syria மானுடத்தின் எசமான்கள் (பாகம்–01) - தமிழில் ந.மாலதி

பிரபல லண்டன் பத்திரிகை ஒன்றின் நிருபரான கிடியன் ரச்மான் (Gideon Rachman)  மேற்குலகின் இன்றைய சவால்களையும் உலக ஒழுங்கையும் இவ்வாறு விபரிக்கிறார்.

“பனிப்போர் முடிவுக்கு வந்த காலத்திலிருந்து ஐ-அமெரிக்காவின் இராணுவ பலமே உலக அரசியலின் மையப்புள்ளியாக இருந்து வந்துள்ளது. மூன்று இடங்களில் இது மிகவும் முக்கியமாக இருக்கிறது. ஐ-அமெரிக்க கடற்படை கிழக்கு-ஆசியாவின் பசுபிக்கடலை தனது சொந்த ஏரிபோல பாவிக்கிறது. ஐரோப்பாவில் நேற்றோ (NATO) – அதாவது அதன் இராணுவ செலவின் முக்கால் வீதத்தை கொடுக்கும் ஐ-அமெரிக்கா – “அதன் உறுப்பு நாடுகளின் எல்லைகளை பாதுகாக்கிறது”. மத்திய-கிழக்கில் அமெரிக்காவின் இராட்சத கடற்படை மற்றும் விமானப்படை தளங்கள் அதன் நட்பு சக்திகளுக்கு ஆறுதலாகவும் எதிரிகளுக்கு பயமுறுத்தலாகவும் உள்ளன.”

கிடியன் ரச்மான் தொடர்ந்து, “இந்த மூன்று பகுதிகளிலும் இந்த பாதுகாப்பு முறைகளுக்கு இன்று சவால்கள் உள்ளன” என்றார். ஏனெனில் உக்கிரேயினிலும் சிரியாவிலும் ரசியா தலையிட்டிருக்கிறது.

சீனாவுக்கு அருகில் உள்ள “அமெரிக்காவின் ஏரியாக” இருந்த கடற்பிராந்தியத்தை சீனா கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது. ஆகவே அடிப்படை கேள்வி என்னவென்றால், ஏனைய வல்லரசுளும் தங்கள் தங்கள் பிராந்தியங்களில் தங்கள் பலத்தை நிலைநிறுத்துவதை ஐ-அமெரிக்கா ஏற்றுக்கொள்ள வேண்டுமா என்பதுதான்.chinese fleet மானுடத்தின் எசமான்கள் (பாகம்–01) - தமிழில் ந.மாலதி

பொதுப்புத்தியில் பார்த்தாலும், பொருளாதார பலத்தை பரவலாக்கவும் இதை ஐ-அமெரிக்கா ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றே கிடியன் ரச்மான் தனது ஆக்கத்தில் சொல்கிறார்.

உலக ஒழுங்கையும் இப்பிரச்சனையையும் பலகோணங்களில் இருந்து அணுகலாம் என்பது உண்மைதான். ஆனால் இம்மூன்று பிரதேசங்களும் முக்கியமானவை என்பதால் இந்த கோணத்திலிருந்தே இவற்றை அலசுவோம்.

தொடரும்…..