Home Blog Page 1876

இராணுவக்கட்டுப்பாட்டை நடைமுறைப்படுத்த கோவிட்19 இனை சிறீலங்கா பயன்படுத்தக்கூடாது- சூக்கா

கோவிட் 19 இற்கான இலங்கையின் இராணுவமயப்படுத்தப்பட்ட பதில் நடவடிக்கைக்கு பொதுமக்கள் மேற்பார்வை போதாமல் இருப்பது சில பாரதூரமான மனித உரிமைகள் பற்றிய கரிசனைகளை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதே உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் தெரிவித்துள்ளது.

“கோவிட் 19 இற்கான பதில் நடவடிக்கையினை ஜனாதிபதி இருந்த அதே  இராணுவப்படையணியிலே கடமையாற்றிய இலங்கையின் போர்க் குற்றவாளி ஒருவர் தலைமை தாங்குகின்றமையானது வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் மேற்பார்வை செய்தல் பற்றிய கேள்விகளை எழுப்புவதாக அடைக்கப்பட்ட சூழ்நிலையில் உள்ள சர்வதே உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.

கோவிட் 19 அவசர காலநிலையைக் கையாள்வதற்கு மேற்கொள்ளப்படும் எந்தவொரு நடவடிக்கையும் சட்டம், விகிதசமம் மற்றும் பாரபட்சமின்மை போன்ற கோட்பாடுகளைக் கொண்டு வழிநடத்தப்பட வேண்டும் என நீதிக்குப்புறம்பான மற்றும் உடனடி அல்லது எழுமாற்றான கொலைகளுக்கான ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதி அக்னஸ் கொலமாட் தெரிவித்துள்ளார்.

அரசாங்க அதிகாரிகளை விமர்சித்து சமூகவலைத் தளங்களில் பதிவுகளை மேற்கொள்பவர்களை கைது செய்து சட்டநடவடிக்கை எடுக்குமாறு பிரதி பொலிஸ்மா அதிபர் விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார். இது கருத்துச் சுதந்திரத்தை மறுக்கும் செயல்.

அரசாங்கத்தின் பதில் நடவடிக்கைகளை மேற்பார்வை செய்யும் சிவில், கட்சி சாரா சுயாதீனமான ஒரு பதில் நடவடிக்கை ஆணைக்குழுவினை அமைக்குமாறும், நோய் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கு தாம் விரும்பும் எதையும் செய்வதற்கு இராணுவம் மற்றும் காவல்துறையினர் அனுமதிக்கப்படக் கூடாது எனவும் நாம் இலங்கை அரசாங்கத்திற்கு அழைப்புவிடுக்கின்றோம். விசேடமாக ஏற்கனவே மதிப்பிழந்த அதிகாரிகளின் கள்ளத்தனமான நடவடிக்கைகள் மூலம் இராணுவக்கட்டுப்பாட்டை அமுல்ப்படுத்த கோவிட்19 இனை ஒரு சாட்டாக பயன்படுத்தக்கூடாது, என சூக்கா கருத்து தெரிவித்துள்ளார்.

மீண்டும் ஏமாற்றப்பட்ட மலையக மக்கள்

மலையக தேயிலைத் தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றிற்கு 1000 ரூபாய்கள் ஊதியமாக வழங்கப்படும் என்று சிறீலங்காவின் புதிய அரசு தெரிவித்த வாக்குறுதிகள் மீண்டும் வழமைபோல் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

முதலாளிமார் சம்மேளனத்துடன் பல சுற்று பேச்சுக்கள் மேற்கொள்ளப்பட்ட போதும் தற்போதைய கொரோனா வைரசின் நிலையை முன்நிறுத்தி சிறீலங்கா அரசும், முதலாளிமார் சம்மேளனமும் 1000 ரூபாயை ஊதியமாக வழங்கமுடியாது தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, கடந்த நாலரை வருடங்களான பல வழிகளில் நாம் முயற்சிகளை மேற்கொண்டிருந்தோம். ஆனால் ஊதிய உயர்வு விடயத்தில் எம்மால் முன்னேற்றம் காண முடியவில்லை என முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

விவசாயிகளை கைவிட்டது சிறீலங்கா அரசு

சிறீலங்கா அரசின் பொறுப்பற்ற நடவடிக்கையினால் விவசாயிகள் மிகப்பெரும் அனர்த்தத்தை எதிர்கொண்டுள்ளதாக யாழ் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

சிறீலங்கா அரசு மேற்கொண்டுவரும் தொடர் ஊரடங்குச்சட்டம் யாழ் விவசாயிகளை மிகப் பெரும் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது. யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய பகுதிகளில் உள்ள விவசாயிகள் தமது விளைபொருட்களான தக்காளி, கத்தரிக்காய், வெங்காயம் என்பவற்றை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அதேசமயம் தென்னிலங்கையில் உள்ள விவசாயிகளும் தமது விளை பொருட்களை சந்தைப்படுத்த முடியாது, குறைந்த விலையில் விற்பனை வெய்வதாக அல்லது அவற்றை எறிவதாக சிறீலங்கா விவசாயிகள் சபையின் செயலாளர் ரி.பி. சரத் தெரிவித்துள்ளார்.

எம்பில்லிப்பிட்டியா, தம்புதெகமா, நுவரேலியா, தம்புள்ள கெபெற்றிபோல ஆகிய பிரதேசங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கோவிட்-19 – இறப்பு எண்ணிக்கை 108,480 ஆக அதிகரிப்பு

கொரோனா வைரசின் தாக்கத்தினால் உலகில் உள்ள நாடுகள் அதிக உயிர் மற்றும் பொருளாதார இழப்புக்களை சந்தித்து வருவது நாம் அறிந்ததே இந்த நிலையில், நேற்று (11) வரையில் 108,480 பேர் பலியாகியுள்ளதுடன், 1,774,063 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 401,500 பேர் குணமடைந்துள்ளனர்.

அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், பிரித்தானியா ஆகியவை அடங்கும். பிரித்தானியாவில் 9,875 பேர் பலியாகியுள்ளனர். ஸ்பெயினில் 16,606 பேர் பலியாகியுள்ளதுடன், இத்தாலியில் 19,468 பேர் மரணித்துள்ளனர். பிரான்ஸ் இல் 13,832 பேர் பலியாகியுள்ளனர், அமெரிக்காவில் 20,469 பேர் பலியாகியுள்ளதுடன், அங்கு நாள் ஒன்றிற்கு ஏறத்தாள 2,000 பேர் மரணித்து வருவது குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக்கில் நேரடி ஒளிபரப்பு செய்தவரிடம் ரூ.50 இலட்சம் நஷ்டஈடு !

அக்கரைப்பற்று பிரதேசத்தினைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியதாக தெரிவித்து கடந்த ஏப்ரல் 8ஆம் திகதி புதன்கிழமை பேஸ்புகில் நேரடி ஒளிபரப்பு செயற்பட்டதற்கு எதிராக 50 இலட்சம் ரூபா நஷ்டஈடு கோரப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சட்டத்தரணி ராதீப் அஹமதினால் குறித்த பேஸ்புக் பக்கத்தின் உரிமையாளருக்கு கடிதமொன்று கடந்த ஏப்ரல் 10ஆம் திகதி வெள்ளிக்கிழமை மின்னஞ்சல் ஊடாக அனுப்பபட்டுள்ளது.

தற்போது நாட்டில் நிலவும் அவசர நிலைமையில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் தகவல்களை வெளியிடும் போது கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குமுறைகள் பற்றி சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையினை ஒழுங்கு விதிகளை குறித்த பேஸ்புக் பக்கம் மீறியுள்ளதாக சட்டத்தரணியின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், தனது கட்சிகாரருக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் நோக்கோடு குறித்த வீடியோ ஒளிபரப்பட்டமையினால் தனது கட்சிக்காரரையும் அவரது குடும்பத்தினரையும் மிகவும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கியுள்ளதுடன் சமூகத்திலிருந்து அவர்கள் ஒதுக்கப்பட்டு அவமானத்திற்குள்ளாகும் நிலையினை தோற்றுவித்துள்ளதாக குறித்த கடிதத்தில் சட்டத்தரணி ராதீப் அஹமத் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மன உளைச்சல் மற்றும் அவமானம் என்பவற்றிக்கு 50 இலட்சம் ரூபாவினை தனது கட்சிக்காரர் மதீப்பீடு செய்கிறார். இந்த நட்டஈட்டினை 14 நாட்களுக்குள் செலுத்த தவறும் பட்சத்தில் தங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டத்தரணியினால் பேஸ்புக் பக்கத்தின் உரிமையாளருக்கு அனுப்பியுள்ள கடித்ததில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்து நீரை வீடுகளிலேயே தயாரித்து புதுவருடத்தை கொண்டாடுங்கள் பிரபாகரக்குருக்கள் தெரிவிப்பு

நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக இம் முறை புதுவருடக் கொண்டாட்டங்களை வீடுகளிலேயே கொண்டாடுமாறு வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியத்தின் உப தலைவர் தெரிவித்துள்ளார்.

வீடுகளில் உள்ள பொருட்களைப் பயன்படுத்தி மருத்து நீரைத் தயாரித்து கோவில்களுக்கு வருவதைத் தவிர்த்து இயன்றவரை பாதுகாப்பான முறையில் உங்கள் இஷ்ட தெய்வங்களை வழிபட்டு மகிழ்வுடன் புதுவருடத்தை கொண்டாடுமாறு அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை 14 ஆம் திகதி கோவில்களுக்கு வருபவர்கள் தங்களுடையதும் சமூகத்தினுடையதும் நலனைக்கருததில் கொண்டு முகக்கவசங்களை அணிவதுடன் கோவில்களில் சமூக இடைவெளியை பின்றபற்றுமாறும் கோரியுள்ளார்.

வவுனியாவில் பட்டினிச்சாவை எதிர்நோக்கும் கிராமவாசிகளின் அவல வாழ்வு.

வவுனியா மாவட்டத்தில் தற்போதும் வீடுவாசல் இல்லாமல் மந்தைகள் வசிக்கும் இடங்கள் போல கொட்டகைகளுக்குள் கைக் குழந்தைகளுடன் வசிக்கும் குடும்பங்களும் வாழ்துகொண்டுதான் இருக்கிறார்கள். இந்த ஊரடங்குச் சட்ட காலகட்டத்தில் கூலிவேலைகள் கூட கரம் கிட்டாமல் அன்றாடம் அரைவயிற்றுக் கஞ்சிக்கே கஸ்டப்படும் நிலையில் வாழ்கின்றனர்.

93264652 3180112822213314 1118586410761191424 n வவுனியாவில் பட்டினிச்சாவை எதிர்நோக்கும் கிராமவாசிகளின் அவல வாழ்வு.

நீங்கள் பார்க்கும் இடம் ஆடுமாடுகள் வசிக்கும் இடமல்ல மனிதன் வசிக்கும் கூடாரம் அதுவும் வவுனியா தவசிகுளம் ஆற்றங்கரை ஓரக் குடியிருப்பிலேயே இந்த இளம் குடும்பம் வசித்து வருகின்றது.

IMG 0698 வவுனியாவில் பட்டினிச்சாவை எதிர்நோக்கும் கிராமவாசிகளின் அவல வாழ்வு.

IMG 0702 வவுனியாவில் பட்டினிச்சாவை எதிர்நோக்கும் கிராமவாசிகளின் அவல வாழ்வு.

IMG 0685 வவுனியாவில் பட்டினிச்சாவை எதிர்நோக்கும் கிராமவாசிகளின் அவல வாழ்வு.IMG 0679 வவுனியாவில் பட்டினிச்சாவை எதிர்நோக்கும் கிராமவாசிகளின் அவல வாழ்வு.

IMG 0671 வவுனியாவில் பட்டினிச்சாவை எதிர்நோக்கும் கிராமவாசிகளின் அவல வாழ்வு.

இவ்வாறு வவுனியா மாவட்டத்தில் யேசுபுரம், கிறீஸ்தவகுளம், ஆச்சிபுரம், ஈஸ்வரிபுரம், கப்பாச்சி, வீரபுரம், மரையடித்தகுளம், விளக்குவைத்தகுளம், போன்ற பல கிராமங்களில் வசிக்கும் மக்கள் மீள்குடியேற்றப்பட்ட 10 வருடங்கள் கடந்தும் இன்றும் அவலநிலையில் வாழ்ந்து வருகின்றனர்.

இவர்களின் வாழ்க்கை முறைபற்றி இதுவரைகாலமும் எந்த அரசியல் வாதிகளும் அரச அதிகாரிகளும் கவனம் செலுத்தாமல் அசண்டையாக இருப்பது மிக வேதனைக்கும் கண்டனத்துக்கும் உரிய விடையம்.

தாயகத்தில் சிலஇடங்களில் மனிதம் வாழ்ந்தாலும் பல இடங்களில் மனிதம் மரணித்து போய்விட்டது.

பாடசாலைக் கற்றல் நடவடிக்கைகள் மே மாதம் 11ஆம் திகதி ஆரம்பம்.

இந்த ஆண்டின் இரண்டாம் தவணை எதிர்வரும் மே மாதம் 11ஆம் திகதி ஆரம்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இரண்டாம் தவனை இம் மாதம் 20ஆம் திகதி ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டிருந்தது.

இருப்பினும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த இந்த திட்டம் பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அmதேபோல் ,பலக்லைக்கழகங்களை மீள ஆரம்பிக்கும் திகதி குறித்து கலந்துரையாடி தீர்மானம் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர் கல்வி அமைச்சகம் இதனை தெரிவித்துள்ளது.

கிறிஸ்தவ மக்கள் இன்று உயிர்த்த ஞாயிறு தினத்தை அனுட்டிக்கின்றனர்.

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மூன்றாம் நாள் உயிர்த்தெழுவதைக் குறிக்கும் தினமாக இந்த உயிர்த்த ஞாயிறு கிறிஸ்தவர்களினால் அனுட்டிக்கப்படுகிறது.

கடந்த வருடம் உயிர்த்த ஞாயிறு தினத்தில் கொடூரமான பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்றிருந்தது.

இந்த நிலையில், இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, உயிர்த்த ஞாயிறு தினத்தை தங்களது வீடுகளின் இருந்து அனுட்டிக்குமாறு கிறிஸ்தவ மக்களிடம், கிறிஸ்தவ மதகுருமார்கள் கோரியுள்ளனர்.

கொரோனா வைரஸ் காரணமாக கிறிஸ்தவ மக்களுக்கும், நாட்டிலுள்ள ஏனைய மக்களுக்கும் சவால் நிலை ஏற்பட்டுள்ளதாக பேராயார் கர்த்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்

நாட்டு மக்கள் என்ற ரீதியில் பிரிவினை மற்றும் தவறான புரிந்துணர்வுகளை விடுத்து சிறந்த வாழ்க்கை முறையினை ஏற்படுத்த வேண்டும்.

இந்த முறை உயிர்த்த ஞாயிறு ஆராதனைகளை வீட்டில் இருந்தவாரே அனுட்டிக்கவும்.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நாட்டில் சகலரினதும் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.

அதனை முழுமையாக ஒழிப்பதற்கான வேலைத்திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்படுகின்றன.

ஆகவே எந்தவொரு மதத்தினை பிற்பற்றுவராக இருப்பினும் இலங்கையர் என்ற ரீதியில் ஒன்று பட்டு இந்த வைரஸ் தொற்றினை ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுப்போம் என பேராயார் கர்த்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்

இதேவேளை, தற்போது கொரோனா வைரஸ் பரவுவதுடன் உலக மக்கள் முகம்கொடுத்துள்ள பாரிய அனர்த்தம் அனைவரையும் கவலைக்குள்ளாக்கியுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நாடும், மக்களும் சவால் மிகுந்த சுகாதார அச்சுறுத்தலுக்கு முகம்கொடுத்துள்ள இந்த சந்தர்ப்பத்தில் அரசாங்கத்தினதும் சுகாதார அதிகாரிகளினதும் அறிவுறுத்தல்களுக்கு ஏற்ப வீடுகளில் இருந்து இயேசு கிறிஸ்துவுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவீர்கள் என அரசாங்கம் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கடந்த வருடம் உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்றம் தாக்குதலின் துன்பியல் நினைவுகள், நாட்டு மக்களின் நினைவுகளில் இருந்து நீங்காது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவம் இடம்பெறாமல், தாய்நாட்டை பாதுகாப்பாக வைத்திருப்பதில், அரசாங்கம் என்ற வகையில் பொறுப்புடன் உள்ளதாக, உயிர்த்த ஞாயிறு தின வாழ்த்துச் செய்தியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முழு உலகமும் தற்போது வைரஸ் தொற்றினால் பாதிப்பை எதிர்கொண்டுள்ள நிலையில், நாட்டு மக்கள் தேவாலயங்களுக்கு செல்லாமல், வீடுகளிலேயே தங்களின் சமய வழிபாடுகளை மேற்கொள்ளுமாறும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கேட்டுக்கொண்டுள்ளார்.