Home Blog Page 1879

மரக்கறிவகைகளை கொள்வனவுசெய்வதற்காக விசேட ஏற்பாடுகள் முன்னெடுப்பு

மரக்கறி செய்கையாளர்களின் நன்மைகருதி வவுனியாவிலிருந்து வேறு மாவட்டங்களிற்கு மரக்கறிகளை கொண்டு செல்லும் மொத்த வியாபாரிகளின் விபரங்கள் வவுனியாமாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தால் வழங்கப்பட்டுள்ளது. குறித்த வியாபாரிகளுடன் தொடர்புகொள்வதன் மூலம் வவுனியாவில் மரக்கறிசெய்கையில் ஈடுபடுவர்கள் தமது உற்பத்திபொருட்களை விற்பனை செய்யமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்ததவகையில்
தயாபரன் 776172821ஓமந்தையில் இருந்து வவுனியா வரை.,
டிக்ஸன் 770881553 வவுனியா மாவட்டம்,
சத்தியமோகன் 779446017 வவுனியா மாவட்டம்,
சந்திரகுமார் 773640417 நெடுங்கேணி,
தங்கவேல் தங்கரூபன் 779669 994 நெடுங்கேணி,
அகிலநாதன் 77155817 நெடுங்கேணி,
முருகதாஸ் 770755021 நெடுங்கேணி,
விநோ765331276 நெடுங்கேணி,
சிறிகாந்தன் 771667890 வவுனியா மாவட்டம்,
விக்கினேஸ்வரன் 768649698 (அனைத்து மாவட்டங்கள்)ஆகிய மொத்தவியாபாரிகளது தொலைபேசி இலக்கங்களை வவுனியா மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களம் வழங்கியுள்ளது.

சமூர்த்தி பயனாளிகளுக்கு நன்கொடையாக -5000-ரூபாய்

சமூர்த்தி பணமாக வழங்கப்பட்ட 5000 ஆயிரம் ரூபாய் நன்கொடையாக வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சமூர்த்தி பயனாளிகளுக்கு அரசாங்கம் எற்கனவே 10 ஆயிரம் ரூபாய் கடன் வழங்க திட்டமிட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய முதலில் 5000 ரூபாய் வழங்கப்பட்டதாகவும் இது அரசாங்கத்தால் நன்கொடையாக மாற்றப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

யாழ். பெண் ஒருவர் பிரான்ஸில் கொரோனா பாதித்து மரணம்

பிரான்ஸில் வசித்து வரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் கொரோனா வைரஸ் தாக்கத்திற்குள்ளாகி மரணமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம்(08) உயிரிழந்த இவர் யாழ்ப்பாணம் நீராவியடி பகுதியைச் சேர்ந்த உமாசுதன் சாம்பவி என்பவராவார்.

தாய் தந்தை இல்லாத நிலையில் பிரான்ஸில் வசித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவிட்-19 – இறப்பு எண்ணிக்கை 95,403 ஆக அதிகரிப்பு

கொரோனா வைரசின் தாக்கத்தினால் மேற்குலக நாடுகள் அதிக பாதிப்புக்களை சந்தித்து வருவதுடன், இதுவரையில் 95,403 பேர் பலியாகியுள்ளதுடன், 1,598,117 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 355,401 பேர் குணமடைந்துள்ளனர்.

அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இறந்தவர்களின் விபரம்:

இந்தாலி – 18,279

ஸ்பெயின் – 15,447

அமெரிக்கா – 16,510

பிரான்ஸ் – 12,210

பிரித்தானியா – 7,978

ஈரான் – 4,110

சீனா – 3,335

நெதர்லாந்து – 2,396

ஜேர்மனி – 2,529

பெல்ஜியம் – 2,523

சுவிற்சலாந்து – 948

கனடா – 504

இந்தியா – 226

சுவீடன் – 793

மன்னாரில் விபத்து – இரண்டு பெண்கள் மரணம்

மன்னார்-மதவாச்சி பிரதான வீதி, பரப்பாங்கண்டன் பகுதியில் இன்று (9) வியாழக்கிழமை மதியம் 2.30 மணியளவில் இடம் பெற்ற விபத்தில் இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

மன்னாரில் இருந்து சென்ற மோட்டார் சைக்கிலும், முருங்கன் பிரதான வீதியூடாக மன்னார் நோக்கி வந்த பிக்கப் ரக வாகனமும் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த குறித்த இரு பெண்களும் உயிரிழந்துள்ளனர்.

குறித்த இரு பெண்களும் உடன் பிறந்த சகோதரிகளான சந்தியோகு லிண்டா (40), மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றுகின்றார். மற்றையவர் சந்தியோகு டெரன்சி (25). இவர் மன்னார் அஞ்சல் அலுவலக பொறுப்பதிகாரியாவார்.

குறித்த இருவரும் கடமை முடிந்த நிலையில் மன்னாரில் இருந்து கட்டை அடம்பன் பகுதியில் உள்ள அவர்களுடைய வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் பயணித்த போதே குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது.

mannar மன்னாரில் விபத்து - இரண்டு பெண்கள் மரணம்

உயிரிழந்த குறித்த இரு பெண்களினதும் சடலம் மன்னார் பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குறித்த வாகனத்தின் சாரதி முருங்கன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

manna2 மன்னாரில் விபத்து - இரண்டு பெண்கள் மரணம்

ஆசியர்களையும், கறுப்பினத்தவரையும் கூடியளவில் தாக்கும் கொரோனா

இங்கிலாந்தில் ஒப்பீட்டு ரீதியில் பெருமளவிற்கு இலங்கை, இந்தியா போன்ற ஆசிய நாடுகளிலிருந்தும், ஆபிரிக்கா, கரிபியன் போன்ற நாடுகளிலிருந்தும் வந்து குடியேறிய; முறையே ஆசியர்களையும், கறுப்பினத்தவர்களையுமே கொரோனாவானது ஒப்பீட்டளவில் கூடியளவில் தாக்கியுள்ளது (படம்1).

இதற்கான காரணத்தை அறிய ஆய்வுகள் இனித்தான் தொடங்கப்பட வேண்டும். ஆனால் அமெரிக்காவிலும் கறுப்பினத்தவர்களே கூடுதலாக நோயினால் தாக்கப்பட்டுள்ளார்கள். குறிப்பாக சிக்காக்கோவில் தாக்கப்பட்டவர்களில் 70 விழுக்காடு கறுப்பினத்தவர்களே (சிக்காக்கோ மக்கள் தொகையில் 33% மட்டுமே அவர்கள்) ஆவார்கள். அங்கு மேற்கொண்ட ஒரு ஆய்வில் சில முடிவுகளைப் பெற்றுள்ளார்கள்.

  1. கறுப்பினத்தவர்கள் கூடியளவு சொந்த வீட்டினைக் கொண்டிராமை. (இட நெருக்கடி)

2.இன்றியமையாத சேவைகளில் கூடியளவு கறுப்பினத்தவர்கள் வேலை செய்தல்.

3.கறுப்பினத்தவர்கள் கூடியளவு மருத்துவக் காப்புறுதி பெற்றிராமை.

போன்ற சில காரணங்கள் முதற் கட்ட சிக்காக்கோ ஆய்வில் தெரிய வந்துள்ளது. இவற்றினை முறையே இங்கிலாந்திலுள்ள ஆசியர்களின் பாதிப்புடன் ஒப்பிட்டுப் பார்ப்போம்.

1.வீட்டு உடமையாளர் – இதனைப் பொருத்தவரை ஆங்கிலேயரில் 68% ஆகக் காணப்படும் அதே வேளை இந்தியர்களில் (ஆசியர்களில்) இது 74% ஆக சிறப்பாகவேயுள்ளது. {Source: Ethnicity facts and figures 2016 -2018}

  1. இன்றியமையாத சேவைகளில் வேலை – படம் 2 இனைப் பாருங்கள். மருத்துவர்களில் மட்டுமே ஒரளவிற்கு ஆசியர்கள் உள்ளார்கள். இங்கும் வெள்ளையர்களே கூட. செவிலியர்கள், அம்பூலன்சில் வேலை செய்வோர் வெள்ளையர்களே கூடுதல்.

chart2 ஆசியர்களையும், கறுப்பினத்தவரையும் கூடியளவில் தாக்கும் கொரோனா

  1. இங்கு இலவசிய மருத்துவம் (NHS) என்பதால் காப்புறுதி பொருந்தாது.

எனவே அமெரிக்கக் காரணங்கள் இங்கு பொருந்தி வரவில்லை. இங்கும் இது தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப்படவேண்டும்.

எனது நோக்கில் பின்வருவன காரணங்களாகவிருக்கலாம். (இது ஒரு துறை சார்ந்த ஆய்வன்று)

1.ஒப்பீட்டு ரீதியில் எம்மவர்களிற்கு நாள்பட்ட நோய்கள் கூடுதலாகவிருத்தல். எடுத்துக் காட்டாக, நீரிழிவு 2 (type 2) வகையானது ஒரு வெள்ளையரைத் தாக்குவதை விட ஆறு மடங்கு கூடுதலாக தென்னாசியர்களைத் தாக்குகின்றது.

  1. கை கழுவுதல்-

முகநூலில் வேண்டுமானால் கை கழுவுவது எமது முன்னோரின் பழக்கம் எனக் கம்பு சுற்றலாம், ஆனால் கொரோனா வரும்வரை எம்மில் பலரிற்கு தொற்று நீக்க எவ்வாறு கை கழுவுவது எனச் சரியாகத் தெரியாது. ஒப்பீட்டு ரீதியில் ஏற்கனவே வெள்ளையினத்தவர்கள் கூடியளவு விழிப்புணர்வு கொண்டவர்கள். உண்பதற்கு கைகளைப் பயன்படுத்தும் நாம் கூடியளவில் இதில் கவனம் செலுத்த வேண்டும். வெறும் தண்ணீரில் கையை நனைப்பது தொற்று நீக்கப் பயன்படாது. அதே போன்று எம்மவர்களிடம் முகத்திரை அணிவது பற்றிய விழிப்புணர்வும் குறைவு (அதாவது மாசடைந்த கையினாலேயே முகத்திரையினைத் தொடுவது போன்ற).

  • கூட்டமாக வாழ்தல் – ஒப்பீட்டுரீதியில் இதுவும் எம்மிடம் கூடுதல். உறவினர்கள், நண்பர்கள் எனப் பல்வேறு வகைகளில் நாம் சமூகத் தூரமாக்கலினை மீறி விடுகின்றோம்.
  • மதப் பிற்போக்குத்தனங்கள் – இந்துக்களும், கிறித்தவர்களும் சரி எம்மவர்கள் மத வழிபாடுகளிற்காக மார்ச் இறுதி வரை இங்குள்ள வழிபாட்டுத் தலங்களிற்குச் சென்றே வந்தார்கள். மேலும் இறைவன் காப்பாற்றுவான் என்ற நம்பிக்கையில் எச்சரிக்கையின்றியிருத்தல். அதாவது மதம் அறிவியலைவிடப் பெரியது என்ற கருத்து. இவ்வாறான பிற்போக்குத்தனம் வெள்ளையினத்தவர்களிடம் குறைவு.
  • போரிற்கேயே தப்பி வந்த எம்மை கொரோனா என்ன செய்யும் என்ற அசட்டை சில ஈழத் தமிழர்களிடமுண்டு.
  • அச்சத்திற்கும், எச்சரிக்கைக்குமிடேயேயான சமநிலை பற்றிய விழிப்புணர்வு இன்மை. சிலர் நோய் வந்தாலே சா என்ற அச்சத்திலேயே இருக்க, வேறு சிலர் இது ஒரு வழமையான காய்ச்சல் போன்றது என எண்ணியுள்ளார்கள். ஒரு சமநிலையான அணுகுமுறை குறைவு (இது அமெரிக்க ஆய்விலும் தெரிய வந்தது).
  • நாங்கள் வேரோடு வேறொரு மண்ணிலிருந்து பிடுங்கப்பட்டு இந்த மண்ணில் நடப்பட்டவர்கள். எனவே இயல்பாகவே சிக்கல்கள் எமக்குக் கூடுதலாகவேயிருக்கும். எனவே ஒப்பீட்டு ரீதியில் கூடியளவு எச்சரிக்கையடைய வேண்டியவர்கள் நாமே.

விழித்திருப்போம், உயிர்ப்போடு இருப்போம்,

வி.இ.  குகநாதன்

 

ஒரு மில்லியன் பெறுமதியான நிவாரண பொருட்கள் உதவி!

பிரான்ஸ் வாழ் அராலி அண்ணா விளையாட்டுக் கழகம், மக்களின் பண உதவியின் மூலம் முதல் கட்டமாக ஒரு மில்லியன் பெறுமதியான நிவாரண பொருட்கள் யாழ் மாவட்டம் அராலியில் வாழும் அனைத்து மக்களுக்கும் (சுமார் 950 குடும்பங்களுக்கு) வழங்கியிருக்கின்றது.

araly 1 ஒரு மில்லியன் பெறுமதியான நிவாரண பொருட்கள் உதவி!

கோவிட்-19- லண்டனில் இளம் தமிழ் ஊடகவியலாளர் பலி

கொரோனா தொற்றில் பல தமிழர்களும் அடுத்தடுத்து இறந்து வருகின்ற நிலையில் இலண்டனில் முதல் தமிழ் இளம் ஊடகவியலாளர் ஒருவரும் இன்று ஏப்ரல் 09, 2020 வியாழக்கிழமை பலியாகியுள்ளார்.

இவர் பூநகரியின் முன்னைநாள் கோட்டக்கல்வி பணிப்பாளர் தில்லைநாதன் அவர்களின் மகன் ஆனந்தவர்ணன் (வயது 30) ஆவார்.

இவர் பூநகரி பிரதேச சபையின் முன்னை நாள் உறுப்பினர் என்பதோடு TTN தமிழ் தொலைக்காட்சியின் செய்தி ஆசிரியராகவும், செய்தி வாசிப்பாளராகவும், நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் பணியாற்றியவர்.

பிரான்சில் குறுகிய காலத்திலேயே நிரந்தர குடியுரிமை பெற்று, நோர்வேயில் வசித்து வந்துள்ள நிலையில் தற்போது அவசிய காரணத்தால் இலண்டன் சென்ற நிலையிலேயே இவர் கொரோனா தொற்றிற்கு இலக்காகி இறந்துள்ளார்.

முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற சிறீலங்கா அரசின் இன அழிப்பில் இவரின் தாயார் மரணமடைந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

கிழக்கில் ரம்யமான காட்சி- மக்களுக்கு கிடைத்த வாய்ப்பு

பௌர்ணமி தினமான கடந்த செவ்வாய்க்கிழமை(7) மிகப் பிரகாசமான பெரிய சந்திரனை காணும் வாய்ப்பு இலங்கை மக்களுக்கு தென்படாத போதிலும் கிழக்கு மாகாணத்தில் மிகப் பிரகாசமான சந்திரனாக செம்மஞ்சள் நிறத்தில் தென்பட்டுள்ளது.

கடந்த புதன்கிழமை(8) மாலை 6.30 மணி முதல் 8 மணி வரை கிழக்கு மாகாணத்தின் பெரிய நீலாவணை ,மருதமுனை ,கல்முனை ,சாய்ந்தமருது ,நிந்தவூர், அட்டாளைச்சேனை, ஒலுவில், அக்கரைப்பற்று ,பகுதிகளில் மிகப்பிரகாசமாக சந்திரன் தென்பட்டதை அவதானிக்க முடிந்தது.

இவ்வருடத்தின் மிகப் பிரகாசமான சந்திரனாக இது தென்படும் எனத் தெரிவிக்கப்பட்ட போதிலும் ´சுப்பர் பிங்க் மூன் என´ இது அழைக்கப்படுகிற சந்திரன் தென்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

சந்திரன் தனது சுற்றுவட்டப் பாதையில் பூமிக்கு மிக அருகாக வரும்போது இந்த ´சுப்பர் பிங்க் மூன்´ தோன்றும் என வானியலாளர்கள் கூறுகின்றனர்.

ஏப்ரல் மாதத்தில் வரும் சுப்பர் பிங்க் மூன் ஆனது. எக் மூன், பிஷ் மூன் எனவும் அழைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

விடுவிக்கப்பட்ட கைதிகளில் தமிழர்களில் எவரும் இல்லை ! நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கண்டனம் !!

கொரோனா வைரஸ் காரணமாக சிறிலங்காவின் சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளவர்களில் தமிழர்கள் எவரும் இல்லை என்பது சிறிலங்கா அரசாங்கம் ‘ஓர் இனநாயக அரசு’ என்பதனை மீளவும் வெளிப்படுத்தி நிற்கின்றது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சு தெரிவித்துள்ளது.

பெருந்தொற்றினைத் தடுக்கும் நோக்கத்தோடு, கடந்த மார்ச் மாதம் 17 முதல் ஏப்ரல் 4 வரை 2961 பேர் பல கட்டங்களாக விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் கருத்தினை வெளியிட்டுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் விவாரகங்களுக்கான அமைச்சு, சிறிலங்கா அரசு என்பது ஓர் கட்டமைக்கப்பட்ட பௌத்த பேரினவான இனநாயக அரசு என்பதனை பல தடவைகள் வெளிப்படுத்தியுள்ளன. சமீபத்தில் சாவகச்சேரி மிருசுவில் பகுதியில் சிறுவர்கள் உட்பட 8 தமிழர்களை வெட்டியும் சுட்டும் படுகொலை செய்த போர்குற்றவாளி சுனில் இரத்திநாயக்கா விடுதலை செய்யப்பட்டுள்ளமையானது, சிறிலங்காவில் நீதிக்கானவெளி தமிழர்களுக்கு இல்லை என்பதனை வெளிக்காட்டியிருந்தது.

தமிழர்கள் என்ற ஒரே காரணத்துக்காவே தமிழ்மக்கள் மீது அடக்குமுறையினையும், பாகுபாட்டையும், பாரிய மனிதஉரிமை மீறல்களையும், இனப்படுகொலையினையும் சிறிலங்கா அரசாங்கம் செய்திருந்தது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று ஏற்பட்டுவிடக்கூடாது என முன்னெச்சரிக்கையாக விடுவிக்கப்பட்ட கைதிகளில் தமிழர்கள் எவரும் இல்லை என்பது தமிழர்களுக்கு நீதிக்கான வெளி சிறிலங்காவில் இல்லை என்பதனை மட்டும் வெளிப்படுத்தவில்லை. தமிழ்போர்கைதிகளின் உயிர்பாதுகாப்பினையும் அச்சத்துக்கு உள்ளாக்குகின்றது என நாடுகடந்த தமிழீழ அராசங்கத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சு தெரிவித்துள்ளது.