Home Blog Page 3

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு தடையை நீக்க வைகோ மனு

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை சட்ட விரோத அமைப்பாக அறிவித்து அந்த அமைப்புக்கு ஏற்கெனவே விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய அரசு கடந்த மே 14 அன்று அரசாணை பிறப்பித்துள்ளது.

இதற்காக அமைக்கப்பட்ட டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி மன்மீத் ப்ரீத்தம் சிங் அரோரா தலைமையிலான தீர்ப்பாயம் தடை செய்வது குறித்து ஜூலை 23-ம் திகதிக்குள் விளக்கமளிக்க உத்தரவிட்டிருந்தது. அதன்படி இந்த வழக்கில் விடுதலைப்புலிகள் அமைப்புக்கு தடையை நீக்க வேண்டும்.

இதுதொடர்பாக மத்திய அரசு பிறப்பித்துள்ள உத்தரவை இரத்து செய்ய கோரி மதிமுக பொதுச் செயலாளரான வைகோ தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீதான விசாரணை ஆக.7-க்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

ஜனநாயகத்தை காக்கவே தேர்தலில் இருந்து விலகினேன்: பைடன் விளக்கம்

கடந்த 21-ம் தேதி அன்று அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதாக தற்போதைய அதிபரும், ஜனநாயகக் கட்சியின் வேட்பாளருமான ஜோ பைடன் அறிவித்திருந்தார். இந்தச் சூழலில் அதற்கான காரணத்தை நாட்டு மக்களிடம் அவர் விளக்கியுள்ளார்.

“ஜனநாயகத்தை பாதுகாப்பது அனைத்தையும் விட முக்கியமானது. அதற்காக அனைவரும் ஒன்றுபட வேண்டும். இதற்கு எதுவும் தடையாக இருக்க முடியாது. அதில் தனிப்பட்ட காரணமும் அடங்கும். நான் இந்த பொறுப்பை மதிக்கிறேன். அதை விட தேசத்தை அதிகம் நேசிக்கிறேன். இதன் மூலம் ஜனநாயகக் கட்சியை ஒன்றிணைக்க விரும்புகிறேன்.

அமெரிக்க அதிபராக எனது செயல்பாடு, உலக அளவிலான தலைமைத்துவம் மற்றும் அமெரிக்காவின் எதிர்காலத்திற்கான எனது பார்வை போன்றவற்றை எடுத்துக் கொண்டால் இரண்டாவது முறையாக நான் அதிபர் தேர்தலில் போட்டியிட தகுதி உள்ளது. அமெரிக்க மக்களுக்காக பணியாற்றுவதில் நான் பலம் கொள்கிறேன், மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால், ஜனநாயகத்தை காக்க இந்த முடிவை எடுத்துள்ளேன். அடுத்த ஆறு மாதங்கள் அதிபராக எனது பணியை செய்வேன்.

புதிய தலைமுறையினருக்கு வாய்ப்பு கொடுப்பது தான் சிறந்த வழி. இளம் தலைமுறையினர் நாட்டை ஒன்றிணைக்கும் அந்த பணியை சீரான முறையில் செய்வார்கள் என நம்புகிறேன். இங்கு சர்வாதிகாரிகள் ஒருபோதும் ஆட்சி செய்ய முடியாது. மக்கள்தான் ஆட்சியாளர்கள். அதிகாரம் மக்கள் கையில் உள்ளது.

துணை அதிபர் கமலா ஹாரிஸ் திறன் கொண்டவர். அனுபவமும் பெற்றவர். நம் நாட்டின் சிறந்த தலைவர்களில் ஒருவராக பணியாற்றி உள்ளார். இப்போது சாய்ஸ் அமெரிக்க மக்களிடம் உள்ளது. பொது வாழ்க்கையில் அனுபவம் கொண்டவர்களுக்கு எப்போதும் இடம் உண்டு. அதே நேரத்தில் இளம் தலைமுறையினருக்கும் இங்கு வாய்ப்பு உண்டு” என பைடன் தனது உரையில் தெரிவித்தார்.

எதிர்வரும் ஜனவரி 20, 2025-ம் ஆண்டு வரையில் அவர் அமெரிக்க அதிபராக பொறுப்பில் இருப்பார். இதற்கு முன்னதாக அமெரிக்க அதிபர் தேர்தல் வரலாற்றில், வியட்நாம் போரின் தாக்கத்தால் 1968-ல் தேர்தலில் போட்டியிடாமல் லிண்டன் ஜான்சன் விலகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகின் மதுபான விற்பனையில் சீனா முதலிடம்

உலகின் மாதுபான உற்பத்தி மற்றும் விற்பனை தொழில் 730 பில்லியன் டொலர்களை 2022 ஆம் ஆண்டு ஈட்டியுள்ளது. அதன் மூலம் உலகில் 36 மில்லியன் வேலைவாய்ப்புக்கள் உருவாகியுள்ளன. அதில் சீனாவின் பங்களிப்பு 215 பில்லியன் டொலர் கள் என ஜெனீவாவைத் தளமாகக் கொண்ட உலக மதுபான கூட்டணி என்ற அமைப்பு தனது 2024 ஆம் அண்டுக்கான அறிக்கையில் தெரி வித்துள்ளது.
உலகின் பொருளாதார வளர்ச்சியிலும், நாடுகளின் வரித்துறையின் நிதி வளர்ச்சியிலும் மதுபானத்துறை அதிக பங்களிப்பை வழங்கி வருகின்றது. 2022 ஆம் ஆண்டு தகவல்களின் அடிப் படையில் சீனா முன்னியில் உள்ளது. அதன் பங்களிப்பு 215 பில்லியன் டொலர்கள், அதற்கு அடுத்த நிலையில் அமெரிக்கா உள்ளது. அது 60 பில்லியன் டொலர்களை ஈட்டியுள்ளது. மூன்றாவது இடத்தில் இந்தியா உள்ளது. அதன் வருமானம் 20 பில்லியன் டொலர்கள்.
மதுபான விற்பனையால் உலக நாடுகள் 2022 ஆம் ஆண்டு 390 பில்லியன் டொலர்களை வரியாக சம்பாதித்துள்ளன. இது உலகின் மிக முக்கிய 20 பொருளாதார நாடுகளுக்கு இணையனது. உற்பத்தியாளர்கள் 120 பில்லி யன் டொலர்கள் பெறுமதியான உற்பத்தி மூலப்பொருட்களை கொள்வனவு செய்துள் ளனர். அதில் அரைப் பங்கு விவசாயத்துறைக்கு சென்றுள்ளது.

அமைச்சா் பதவியைத் துறக்கத் தயாராகின்றாா் விஜயதாச? இன்று அறிவிப்பாா்

அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ, இன்று வியாழக்கிழமை விசேட அறிவித்தலொன்றை வெளியிடவுள்ளார்.

கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தில் இன்று முற்பகல் 10 மணியளவில் நிகழ்வொன்றை ஏற்பாடு செய்துள்ள அவர், அந்த நிகழ்வில் விசேட அறிவித்தலை வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடவுள்ளதாக அண்மைக் காலமாக விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்து வந்த நிலையில், இன்றைய தினத்தில் அது தொடர்பில் உத்தியோகபூர்வமாக அவர் அறிவிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.

சுதந்திரக் கட்சியின் மைத்திரி அணியின் வேட்பாளராக விஜேதாச ராஜபக்ஷ நியமிக்கப்படவுள்ளதாக அண்மைக்காலமாக தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், அந்தக் கட்சிக்குள் நிலவும் முரண்பாட்டு நிலைமைகளால் அந்தக் கட்சியின் வேட்பாளராக அன்றி எதிர்க்கட்சிகள் சில இணைந்து அமைக்கவுள்ள புதிய கூட்டணி ஊடாக அவர் வேட்பாளராக அறிவிக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை அவா் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளதால் அமைச்சுப் பதவியை துறந்து அரசாங்கத்தில் இருந்து வெளியேற தீர்மானமெடுக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

பொலிஸ் மா அதிபா் குறித்த தீா்ப்பைப் பயன்படுத்தி தோ்தலை ஒத்திவைக்க திட்டம்? சுமந்திரன்

பொலிஸ் மா அதிபர் தோசப்பந்து தென்னக்கோன் அப்பதவியில் நீடிப்பதற்கு நீதிமன்றத்தால் இடைக்கால தடை உத்தரவு வழங்கப்பட்டிருக்கும் நிலையில், இதனை சாட்டாக வைத்து ஜனாதிபதி தேர்தலை பிற்போடுவதற்கு முயற்சிக்கப்படுவதாகவும் அவசர அவசரமாக அமைச்சரவை கூட்டங்கள் நடப்பதாகவும் நாங்கள் அறிகிறோம் என கூறியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், பொலிஸ்மா அதிபர் பதவி இடைநிறுத்தபட்டாலும் ஜனாதிபதி தேர்தலை நடாத்தும் அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவிற்கு உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று புதன்கிழமை யாழ்.வர்த்தக சங்கத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மேலும் தெரிவிக்கையில், “உயர்நீதிமன்றத்திலே பொலிஸ்மா அதிபருடைய நியமனம் சம்மந்தமாக இடைக்கால உத்தரவு பிறப்பி க்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக 9 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு பல நாட்கள் விவாதம் நடத்தப்பட்டு இந்த வழக்கினை கொண்டு செல்வதற்கு அனுமதியினை வழங்குகின்ற அதே நேரத்தில் ஜனாதிபதியினாலே நியமனம் பெற்ற பொலிஸ்மா அதிபருடைய நியமனம் சட்டபூர்வமானதாக இல்லை என்ற காரணத்தினாலே தேசபந்து தென்னக்கோன் என்ற பொலிஸ்மா அதிபரை அந்த பதவியில் இருந்து இடைநிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது” என்றும் சுட்டிக்காட்டினாா்.

இது தொடா்பில் மேலும் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், “இந்த உத்தரவையடுத்து அமைச்சரவை அவசர அவசரமாக கூடி ஜனாதிபதி தேர்தலை இடைநிறுத்தம் ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதான செய்திகள் எங்களுக்கு கிட்டியிருக்கின்றது. ஒரு நிரந்தர பொலிஸ் மா அதிபர் இல்லாத நிலையில் ஜனாதிபதி தேர்தல் நடாத்த முடியாது என்ற கருத்து நிலவுவதாக நாம் அறிகின்றோம். சட்டத்திலே எந்தவித தடையும் கிடையாது என்பதை அழுத்தம் திருத்தமாக கூறுகின்றேன் ” என்றும் தெரிவித்தாா்.

‘தமிழர்கள் தேர்தலை முற்றாக பகிஷ்கரிக்க வேண்டும்’: கஜேந்திரன் அழைப்பு

வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் ஜனாதிபதித் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

மேலும்  தேர்தல் மீது முற்றாக நம்பிக்கையிழந்துள்ள தமிழ் மக்களை இலங்கையர் என்ற அடையாளத்துக்குள் வைத்துக்கொள்ளவே தமிழ் பொது வேட்பாளர் என்ற நாடகம் அரங்கேற்றப்படுவதாக  கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற விவாதத்தில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,

”இலங்கையில் இனவாதத்துக்கு முற்றுப்புள்ளிவைக்கப்பட்டு அனைவரும் சம உரிமைகளுடன் வாழ வேண்டும் என்றால் ஒற்றையாட்டிச்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து சமஷ்டி அரசியலமைப்பொன்று கொண்டுவரப்பட வேண்டும்.

சமஷ்டி அரசியலமைப்பின் ஊடாக தமிழ், முஸ்லிம் மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். அதன் ஊடாகவே நாட்டை ஆரோக்கியமான வளர்ச்சிப்பாதையில் கொண்டுசெல்ல முடியும்.

நாடாளுமன்றில் கோடி கணக்கில் நிதியை செலவழித்து செய்யப்படும் விவாதங்கள் மற்றும் செயல்பாடுகளின் ஊடாக ஆக்கப்பூர்வமான முடிவுகளை எடுக்க வேண்டும்.

சவால்களை எதிர்கொண்டுள்ள இந்த நாட்டை மீட்டெடுக்க ஒற்றையாட்சி முறையை ஒழிப்பது முதலாவது அவசியமான விடயம்.

ஸ்ரீலங்கா இராணுவம் எங்கள் தேசத்தின் மீது காடையர்கள் கொண்டு இன அழிப்பை கட்டவிழ்த்துவிட்டு பல்லாயிரக்கணக்கான தமிழர்களை கொன்ற ஒரு தினத்தை எம்மால் மறக்க முடியாது.

வெலிகடை சிறையில் குட்டிமணி, தங்கமணி என்ற இரண்டு இளைஞர்கள் கண்கள் தோண்டப்பட்டு படுகொலைப்பட்ட சம்பவத்துக்கு நேற்று நீதி அமைச்சர் சபையில் மன்னிப்பு கோரினார்.

2009இல் மகிந்த மற்றும் கோட்டாபய தலைமையில் ஒன்றரை இலட்சம் தமிழர்களை கொண்ட இனப்படுகொலையொன்று இடம்பெற்றது. அவற்றுக்கெல்லாம் இன்னமும் நீதி கிடைக்கவில்லை.

சிங்கள மக்களுடன் இணைந்து இந்த நாட்டை கட்டியெழுப்ப நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால், இந்த நாட்டில் ஒற்றையாட்சி முறை ஒழிக்கப்பட்டு சமஷ்டி அரசியலமைப்பொன்று கொண்டுவரப்பட்டு எங்கள் தேசம் ஓர் இறைமையுள்ள தேசியமாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.

ஜனாதிபதித் தேர்தலொன்று நடைபெற உள்ளது. தேர்தல் நடைபெறுமா இல்லையா என்ற சந்தேகமும் உள்ளது. சமஷ்டி அரசியலமைப்புக்கான கோரிக்கையொன்றை தென்னிலங்கை முன்வைக்க வேண்டும் என்றே எதிர்பார்க்கிறோம்.

இல்லாவிட்டால் வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் ஜனாதிபதித் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. ஒற்றையாட்சியை நிராகரிக்க நீங்கள் தயாராக இல்லை என்றால் அவர்களை தமிழ் மக்கள் ஆதரிக்க கூடாது.

2005இல் பிரபாகரன் எடுத்த தீர்மானத்தை போன்றதொரு தீர்மானத்தை நாம் எடுக்க வேண்டும். தேர்தல்மீது தமிழ் மக்கள் வெறுப்படைந்துள்ள சூழலில் வடக்கு, கிழக்கில் உள்ள சிவில் அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் இணைந்து பொது வேட்பாளர் என்ற ஒரு சதியை அரங்கேற்றுகின்றனர்.

ரணில் விக்ரமசிங்கவுக்கு இரண்டு ஆண்டுகாலம் ஆட்சியை தொடர அனுமதி வழங்க வேண்டுமென்ற அரசியல் வாதிகளே வடக்கு, கிழக்கில் பொது வேட்பாளர் ஒருவரை களமிறங்க முயற்சிக்கின்றனர்.

ரணில், சஜித், அனுர ஆகிய மூவருக்கும் தமிழர்கள் பகிஷ்கரிப்பு என்ற ஒரு ஆயுதத்தை கையில் எடுக்க கூடாதென்ற தேவை உள்ளது. அவர்கள் இலங்கையர்கள் என்ற அடையாளத்தை நிராகரிக்கும் ஒரு நிலைமை வரக் கூடாது என்பதே அவர்களின் நிலைப்பாடு.

அதற்காகவே தமிழ் பொது வேட்பாளர் என்ற நாடகம் அரங்கேற்றப்படுகிறது. வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் முற்றாக இந்த தேர்தலை முடிவெடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கிறோம்.” என்றார்.

கட்டாய தகன விவகாரம்: பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்கு இழப்பீடு வழங்க சஜித் பிரேமதாச வலியுறுத்தல்

கோவிட் தொற்றுநோய் நிலவிய காலப்பகுதியில் இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட கட்டாய தகன விவ்காரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

மேலும் தகனமா அடக்கமா என்ற விவகாரத்தில், மன்னிப்புக் கேட்டு பிரச்சினையில் இருந்து தப்பி ஓட முயற்சிக்க வேண்டாம்  சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.

‘கோவிட் தொற்றுநோய் நிலவிய காலப்பகுதியில் இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட கட்டாய தகன கொள்கைக்கு மன்னிப்பு கேட்பதென்பது ஒரு சிறந்த விடயம். இந்த தீர்மானத்திற்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் ஆதரவளித்தனர். இதன் மூலம் முஸ்லிம் மக்களின் சமய, கலாசார உரிமைகள் முற்றாக மீறப்பட்டன’ என்றும் நாட்டில் இனவாதமும் மதவாதமும் முன்னெடுக்கப்பட்டன எனவும்  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (24) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம்களை இலக்கு வைத்து அடக்கமா தகனமா என்ற விவகாரம் தொடர்பில் கோட்டாபய ராஜபக்சவின் அமைச்சரவை தவறான தீர்மானத்தை எடுத்தது. இந்த தீர்மானம் எந்த நபரின் அறிக்கையின் அடிப்படையில் எடுக்கப்பட்டது? இது தொடர்பாக ஆலோசனை வழங்கியது யார்? இந்த ஆலோசனை தொடர்பாக அரசியல் தலைமைகள் பரிசீலித்து ஆராய்ந்து பார்க்காததன் காரணம் என்ன? போன்ற விடயங்கள் தொடர்பான காரணங்களை முன்வைக்க வேண்டும் என சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.

நேபாள விமான விபத்தில் பயணிகள் பரிதாப பலி

நேபாளத்தில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் 18 பயணிகள் உயிரிழந்த நிலையில், அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

நேபாள தலைநகர் காட்மாண்டுவில் இருந்து 19 பயணிகளுடன் விமானம் ஒன்று பொக்காராவிற்கு புறப்பட்டு சென்றது. விமானம் புறப்பட்ட சில விநாடிகளிலேயே கட்டுபாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கியது.

இலங்கை அரசு தொடர்ந்து சிறுபான்மை மக்களை துன்புறுத்துகின்றது 

இலங்கை அரசு பயங்கரவாதத் தடுப்புச்சட்டத்தை தொடர்ந்து பயன்படுத்தி தனக்கு எதிரானவர் களையும், சிறுபான்மை மக்களை யும் துன்புறுத்தி வருவதாக அமெரிக்காவின் வொசிங்டனைத் தளமாகக் கொண்ட மனித உரி மைகள் கண்காணிப்பகம் கடந்த புதன்கிழமை  வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
எழுந்தமானமான கைது மற்றும் தடுத்து வைத்து துன்புறுத்து வது போன்றவற்றால் பலர் நீண்ட காலமாக துன்பங்களை சந்தித்து வருகின்றனர். நீண்டகாலம் தடுத்து வைக்கும் மற்றும் எழுந்தமானமாக கைது செய்யும் அதிகாரங்களை பயங்கரவாதச் சட்டம் அரசுக்கு வழங்குகின்றது.
ரணில் விக்கிரமசிங்கா 2022 ஆம் ஆண்டு அரச தலைவராக பதவியேற்றபின்னரும் இந்த சட்டம் தொடர்கின்றது. அனைத்துலக நாணய நிதியமும் இது தொடர்பில் 2023 ஆம் ஆண்டு கருத்தில் எடுத்திருந்தது.
2015 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பயங்கரவாதத் தடுப்புச்சட்டம் 2023 ஆம் ஆண்டு பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமாக மாற்றப்பட்டபோதும் அதுவும் மக்களை துன் புறுத்தும் சரத்துக்களைக் கொண்டுள்ளது.
எனவே இந்த சட்டத்தை அகற்றுவதற்கு இலங்கை அரசின் மீது அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், பிரித்தானியா ஆகிய நாடுகள் அழுத்தங்களை மேற்கொள்ளவேண்டும். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு தனது 46/1 என்ற தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

சுயேச்சை வேட்பாளர்களின் வெற்றி, தொழிற்கட்சி அரசுக்குச் சொல்லும் செய்தி என்ன? – தமிழில்: ஜெயந்திரன்

ஐக்கிய இராச்சியத்தில் தற்போது நடந்து முடிந்திருக்கின்ற பொதுத்தேர்தலில், ஸ்ராமரின் தொழிற்கட்சி, 1997ம் ஆண்டு, புதிய தொழிற்கட்சி என்ற பெயரில், ரோணி பிளேயர் ஈட்டிய வெற்றியைப் போன்று, அதிக ஆசனத்தைப் பெற்று வெற்றியைப் பெற்றிருக்கிறது.
அதற்கு முதல் நாள், கீயர் ஸ்ராமரின் (Keir Starmer) தொழிற்கட்சி, ஐக்கிய இராச்சி யத்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலில், 1997ம் ஆண்டு, புதிய தொழிற்கட்சி என்ற பெயரில் ரோணி பிளேயர் (Tony Blair) ஈட்டிய வெற்றியைப் போன்று, அதிக ஆசனத்தைப் பெற்று வெற்றியை ஈட்டியிருந்தது.
பதின்நான்கு வருடக் காத்திருப்புக்குப் பின்னர், பழமைவாதக் கட்சியின் மோசமான ஆட்சிக்குப் பின்னர், தொழிற்கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்கிறது. ஆனால் இங்கு, இவற்றையெல்லாவற்றையும் விட முக்கியமான ஒரு விடயம் உற்றுநோக்கப்படவேண்டியிருக்கிது.
உண்மையில் தொழிற்கட்சி பெற்ற இந்த அமோக வெற்றி, ஸ்ராமரின் கொள்கைகளை மக்கள் ஏற்றுக்கொண்டதனால் தான் என்று சொல்ல முடியாது. ஆனால் ரோறி (Tory) என்று அழைக்கப்படுகின்ற பழமைவாதக்கட்சியை மக்கள் முற்றுமுழுதாக நிராகரித்ததே இதற்கான முழுமுதற்காரணம் ஆகும்.
நேற்று இரவு, பழமைவாதக் கட்சியினர் துடைத்தழிக்கப்பட்டார்கள். பழமைவாதக் கட்சி க்கு வாக்குச் செலுத்த மக்கள் விரும்பவில்லை. பழமைவாதக் கட்சியின் கோட்டை எனக் கருதப்பட்ட தொகுதிகளில் கூட, முன்னாள் பிரதம மந்திரிகளான திரேசா மே, போறிஸ் ஜோண்சன், டேவிட் கமறொன், மற்றும் பிரித்தானிய வரலாற்றில் மிகக் குறுகிய காலம் பிரதமராகப் பணியாற்றிய லிஸ் ற்றஸ்ற் ஆகியோரின் தொகுதி
களில் கூட அவர்கள் தோல்வியைத் தழுவியிருக் கிறார்கள்.
மிகவும் அதிர்ச்சியளிக்கக்கூடிய வகை யில், பழமைவாதக் கட்சியினர், தங்களது 250 ஆசனங்களை இழந்திருக்கிறார்கள். பழமைவாதக் கட்சியின் முன்னணி ஆளுமைகளான, ஜேக்கப் றீஸ் மொக், பெனி மோடோண்ட், கிராண்ட் ஷப்ஸ் ஆகியோர் கூட தமது ஆசனங்களை இழந் திருக்கிறார்கள். முன்னெப்போதும் இல்லாதவாறு ரோறிக் கட்சியின் அமைச்சரவையைச் சேர்ந்த, 11 முன்னாள் அமைச்சர்கள் தமது பாரா ளுமன்ற ஆசனங்களைக் கோட்டைவிட்டிருக் கிறார்கள். பழமைவாதக் கட்சி முற்றாகத் துடைத் தழிக்கப்பட்டிருக்கிறது.
அதே நேரம், தொழிற்கட்சி அமோக வெற்றியை ஈட்டியிருக்கிறது. ஆனால் அவர் களுக்கு வாக்குச் செலுத்திய வாக்காளர்களில், மூன்றில் ஒரு வீதமானோர் மட்டுமே, அதாவது 35 வீதமானோர் மட்டுமே தொழிற்கட்சிக்கு என்று தமது வாக்குகளை அளித்திருக்கிறார்கள். இந்தத் தேர்தலில் தொழிற்கட்சி பெற்ற வாக்குகள்  1.4 வீதத்தால் மட்டுமே அதிகரித்திருக்கிறது. இது பெருமளவில் ஸ்கொட்லாந்தில்  எஸ்என்பி (SNP) கட்சிக்கு எதிராக அளிக்கப்பட்ட வாக்குகள் ஆகும். 2017ம் ஆண்டில் ஜெறெமி கோபினின் (Jeremy Corbin) தலைமையில், தொழிற்கட்சி பெற்ற வாக்குடன் ஒப்பிடும் போது, இது 5 சதவீதம் குறைவானதாகும்.
2017 மற்றும் 2019ம் ஆண்டுகளில், பழமை வாதக் கட்சியை பிரித்தானிய மக்கள் நிராகரித்தது போல, மீண்டும் ஒரு தடவை அந்தக் கட்சியை மக்கள் நிராகரித்திருக்கிறார்கள் என்றால், கோர்பின் தலைமையிலான தொழிற்கட்சியும் இவ்வாறான ஒரு வெற்றியை நிச்சயமாகப் பெற்றிருக்கும்.
பிரிட்டன் காலாதிகாலமாகப் பின்பற்றி வருகின்ற தேர்தல் நடைமுறையே இதற்கான காரணம் ஆகும். இங்கே வாக்காளர்கள் ஒரேயொரு வேட்பாளருக்கு மட்டுமே வாக்களிப்பார்கள். எந்த வேட்பாளர் அதிகமான வாக்குகளைப் பெறுகின்றாரோ அந்த வேட்பாளர் வெற்றியைத் தனதாக்கிக் கொள்வார். இந்த அணுகுமுறையால் தான் இரண்டு கட்சி ஆட்சி பிரிட்டனில் தக்கவைக்கப்படுகிறது. இது உண்மையில் மக்களது விருப்புக்கு முரணானதாகும்.
இவ்வாறான ஒரு பிரச்சினையான தேர்தல் நடைமுறையில் கூட, சுயேச்சை வேட்பாளர் களைத் தெரிவுசெய்ததன் மூலம் தொழிற்கட்சிக்கு அவர்கள் ஒரு தெளிவான செய்தியைச் சொல்லி யிருக்கிறார்கள்.
இந்தத் தேர்தலில், ஸ்ராமர் தலைமையிலான தொழிற்கட்சி, முன்னர் தங்கள் கோட்டைகளாக விளங்கிய பல தொகுதிகளில், சுயேச்சை வேட்பாளரிடம் தோல்வியடைந்திருக்கிறது. காஸாவில் நிபந்தனையற்ற போர்நிறுத்தம் உடனடியாக ஏற்படுத்தப்படவேண்டும் என்றும்,  பல பத்து ஆண்டுகளாக பாலஸ்தீனத்தில் தொடரும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் என்று கோரி, பாலஸ்தீன ஆதரவுத்தளத்தில் நின்றுகொண்டு, இந்த சுயேச்சை வேட்பாளர்கள் தேர்தலை எதிர்கொண்டிருந்தார்கள். 5 தொகுதிகளில் வாக் காளர்கள், காஸாவில் நடைபெற்றுவரும் யுத்தம் தொடர்பான ஸ்ராமரின் இஸ்ரேல் ஆதரவுக் கொள்கையைப் புறந்தள்ளி, மேற்குறிப்பிடப்பட்ட பாலஸ்தீன மக்களின் பிரச்சினைக்கு ஆதரவாக போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர்களைத் தெரிவுசெய்திருக்கிறார்கள். பதவியிலிருந்து இறக் கப்பட்ட முன்னாள் தொழிற்கட்சித் தலைவரான ஜெறெமி கோர்பின், வடக்கு இஸ்லிங்ரன் தேர்தல் தொகுதியில் பாலஸ்தீனச் சார்பு சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டு, இலகுவாக வெற்றியடைந்திருக்கிறார்.
தொழிற்கட்சி வேட்பாளருக்குப் பாதுகாப்பான தொகுதிகள் எனக்கருதப்பட்ட பல தொகுதி களில், போட்டியிட்ட பாலஸ்தீன சார்பு சுயேச்சை வேட்பாளர்கள், தொழிற்கட்சி வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளின் பெரும்பான்மையை கணி சமான அளவு குறைத்திருக்கிறார்கள். இல்போட் (Ilford) தொகுதியில், தொழிற்கட்சியின் நிழல் சுகாதாரச் செயலரான, வெஸ் ஸ்றீற்றிங்கின் 5000 வாக்குகள் பெரும்பான்மையை வெறும், 500 வாக்காகக் குறைத்திருப்பவர், 23 வயதேயான பிரித்தானிய-பாலஸ்தீனப் பெண்மணி லெயான் மொஹமத் ஆவார். உண்மையில் இங்கே தொழிற்கட்சி வேட்பாளர் அரும்பொட்டில் வெற்றிபெற்றிருக்கிறார். அதே போலவே, பேர்மிங்காம் யாட்லி தொகுதியில் முன்னர் 10,000 வாக்குகள் பெரும்பான்மையைக் கொண்டிருந்த தொழிற்கட்சி வேட்பாளரான ஜெஸ் பிலிப்ஸின் பெரும்பான்மை, பாலஸ்தீன சார்புக் கொள்கையைக் கொண்டிருக்கும் சிறிய கட்சியின் சுயேச்சை வேட்பாளரால் சில நூறு வாக்குகளாகக் குறைக்கப்பட்டிருக்கிறது.
முன்னெப்போதும் இல்லாதவாறு சுயேச்சை வேட்பாளர்கள் பெற்ற வெற்றி, முஸ் லிம் மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட தொகுதிகளில், காஸா தொடர்பாக ஸ்ராமரின் கொள்கைக்குக் கிடைத்த எதிர்ப்பு என்றே பிரிட்டனின் முக்கிய ஊடகங்கள் விளக்கம் கொடுத்துள்ளன. காஸாவில் மேற்கொள்ளப்படும் இனப்படுகொலையை, முஸ்லீம் மக்கள் மட்டுமே எதிர்க்கிறார்கள் என்ற தவறான புரிதலை இது பிரதிபலிக்கிறது. இவ்வாறான கருத்தை வெளியிடுபவர்கள் முஸ்லீம் மக்களிடையே பிரித்தானிய கட்சிகள் தொடர்பாக ஏற்பட்டுள்ள பிளவைப் பெரிதுபடுத்தி, முஸ்லீம் மக்களுக்கு எதிரான உணர்வுகளுக்குத் தூபமிட்டு வருகின்றன.
இங்கே உண்மை மிகவும் தெளிவா னது. முஸ்லீம்களாக இருந்தாலென்ன, இல்லா விட்டாலென்ன, பிரித்தானியாவில் வாழும் மக்களில் அநேகமானோர், காஸாவில் நடக்கும் படுகொலைகள் ஒரு முடிவுக்கு வரவேண்டும் என்றும் அங்கு நீதி நிலைநாட்டப்படவும் வேண்டும் என்றே விரும்புகின்றார்கள். அது மட்டுமன்றி, ஐக்கிய இராச்சியத்தின் ஒரு மூலோபாய ரீதியிலான நட்பு நாடு என்று கருதப்படும் ஒரு நாடாக இருந்தாலும், அந்த நாடு, பன்னாட்டுச் சட்டங்களை மீறுகின்ற போதும், இனப்படுகொலையை மேற்கொள்ளுகின்ற போதும், அவற்றுக்கு எதிராகக் குரல்கொடுக்கும் ஆற்றலை தங்கள் பிரதிநிதிகள் கொண்டிருக்க வேண்டும் என்றே அவர்கள் எதிர்பார்க்கின்றார்கள். அத்தோடு நின்றுவிடாது, பாலஸ்தீன மக்களை அவர்களது வாழ்விடங்களிலிருந்து வலுக்கட்டா யமாக வெளியேற்றிய விடயத்தில், ஐக்கிய இராச்சியம் வகித்த வரலாற்றுப்பங்கை ஏற்றுக் கொள்கின்ற பிரித்தானிய மக்கள், கடந்த காலத்தில் இழைக்கப்பட்ட தவறுகளுக்குப் ஈடாக ஒரு கொள்கைவழி நடைமுறையை பிரித்தானியா இந்த விடயத்தில் பின்பற்ற வேண்டும் என்பதையே எதிர்பார்க்கின்றார்கள். இதனாலேயே, காஸா தொடர்பாக தொழிற்கட்சி கொண்டிருக்கும் கொள்கைகள், அந்த மக்கள் தொழிற்கட்சியை விட்டுச் செல்லக் காரணமாக அமைந்திருக்கிறது.
கடந்த தேர்தலில் நிகழ்ந்த இன்னொரு முக்கிய நிகழ்வு, 14 வீதமான வாக்குகளையும் பாராளுமன்றத்தில் நான்கு ஆசனங்களையும் தனதாக்கிக் கொண்ட தீவிர வலதுசாரிக் கொள்கையைக் கொண்டதும், குடிவரவுக்கு எதிரானதுமான கட்சி பெற்றுக்கொண்ட வெற்றியாகும். முன்னாள் யுகேஐபியின் (UKIP) தலை வரும் பிரெக்சிற் கொள்கையைத் தீவிரமாக முன்னெடுத்தவருமான நைஸல் பராஜ் (Nigel Farage), இப்போது கிளாக்ரன் தொகுதியைப் பிரதிநிதித்துவப் படுத்தும் சீர்திருத்தக் கட்சி சார்ந்த ஒரு பாராளுமன்ற உறுப்பினர் ஆவார். பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்காத போதிலும், குடிவரவு மற்றும்  ஐரோப்பாவுடனான உறவு போன்ற விடயங்களில் பிரித்தானியக் கொள்கை களை வடிவமைப்பதில், கடந்த காலத்தில் முக்கிய பங்கை அவர் வகித்திருக்கிறார். தற்போது அவர் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் ஆகிவிட்டதால் இன்னும் அதிக செல்வாக்கை அவர் செலுத்துவார் என்பதை எதிர்பார்க்கலாம்.
பாராளுமன்றத்தில் உள்ளே இருந்து கொண்டு, குடிவரவு தொடர்பான விடயங்களில் கடுமையான கொள்கைகளைப் பின்பற்ற தொழிற்கட்சிமேல் அவர்கள் அழுத்தத்தைப் பிரயோகிப்பார்கள். இவ்வாறான அழுத்தத்தி லிருந்து தன்னை விடுவித்து, பன்னாட்டுச் சட்டங் களுக்கு ஏற்ற வகையிலும், அறநெறி ரீதியாக ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையிலும், குடிவரவு மற்றும் அகதித்தஞ்சம் வழங்கும் விடயங்கள் தொடர்பான கொள்கைகளை நாட்டுக்குப் பயன் தரக்கூடிய வகையில் ஸ்ராமர் வகுக்க வேண்டியிருக்கும்.
பதின்நான்கு வருடங்களாகத் தொடர்ந்த,  பழமைவாதக் கட்சியின் ஆட்சியில், பிரித்தானிய மக்கள் இழந்தது அதிகம். எமது வாழ்க்கை முன்னரை விட  அதிகம் கஷ்டம் நிறைந்ததாக மாறிவிட்டது. எமது நாட்டின் பொதுச்சேவைகள் அனைத்தும் முடங்கிப்போகும் நிலைக்கு வந்து விட்டன. அதுமட்டுமன்றி, பாலஸ்தீனத்துக்கு ஆதரவான சுயேச்சை வேட்பாளர்களின் வெற்றி சுட்டிக்காட்டுவது போல, ஓர் ஆக்கிரமிப்புக்குள் அகப்பட்டுத் துன்புறும் ஓர் மக்கள் சமூகம் மீது மேற்கொள்ளப்படும் ஓர் இனப்படுகொலை யுத்தத்துக்கு, எமது அரசு ஆதரவை வழங்கி வருவதை நாம் பார்த்திருக்கிறோம். இந்த மக்க ளின் வரலாற்றை நிர்ணயித்ததில் காலனீய பிரித்தானியாவுக்கு அதிகமான பங்கு உண்டு.
மாற்றம் ஒன்று தேவை என்பது எல்லாரதும் எதிர்பார்ப்பு ஆகும். இதனால் தான் பழமைவாதக்கட்சிக்கு எதிராக மக்கள் வாக்களித்தார்கள். நாட்டின் தலைமைத்துவத்தைக் கையிலெடுக்கும் இத்தருணத்தில், தனது வெற்றி முழுமையானது அல்ல என்பதையும், தமது குறைகளைத் தீர்ப்பார்கள் என்ற நம்பிக்கையை மக்களில் அதிகமானோருக்கு அவரால் கொடுக்க முடியவில்லை என்பதையும் அவர் புரிந்துகொள்ள வேண்டும். தேர்தலில் மக்கள் அளித்திருக்கும் முடிவுகளை, தான் நன்கு புரிந்திருக்கிறேன் என்பதை ஸ்ராமர் செயலில் காட்ட வேண்டும். பழமைவாதக் கட்சியை நாம் முற்றுமுழுதாக நிராகரிக்கிறோம். ஆனால் நிபந்தனையற்ற வகை யில் உங்களை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம் என்பது அதன் பொருள் அல்ல.
ஐக்கிய இராச்சியத்தின் பிரதம மந்திரி என்ற வகையில், தான் ஆற்றிய முதலாவது உரையில், இந்த விடயத்தைத் தான் புரிந்துகொண்டிருப்பதாக வெளிப்படுத்திய ஸ்ராமர், இந்த நாட்டில் வாழும் எல்லா மக்களுக்கும் பிரதம மந்திரியாக தான் இருக்க விரும்புவதாகவும் குறிப்பாக தனக்கு வாக்களிக்காதவர்களுக்கும் பிரதமராக இருக்க விரும்புவதாக அந்த உரையில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த விடயத்தை ஸ்ராமர் காத்திரமாக எடுப்பாராக இருந்தால் – உண்மையில் நாட்டுக்காக அவர் காத்திரமாக எடுத்தே ஆகவேண்டும் – தனது கட்சியிலிருந்து தான் வெளியேற்றிய இடதுசாரிக்கொள்கையையுடைய தொழிற்கட்சி உறுப்பினர்கள், தொழிற்சங்கங்கள், மற்றும் இந்த நாட்டில் வாழும் அனைத்து மக்களது தேவை களையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும், வெளிநாட்டுக் கொள்கையில், மனித உரிமையைக் கடைப்பிடித்து, பன்னாட்டுச் சட்டங்களை மதித்து நடக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் அனைத்துச் சக்திகள் போன்ற அனைவரையும் அவர் உள்வாங்க வேண்டும். சுயேச்சை வேட்பாளர்களையும், இடது
சாரிக் கொள்கையையுடைய சிறிய கட்சிகள் சார்ந்த பிரதிநிதிகளையும் அவர் அலட்சியம் செய்யக்கூடாது. காஸா, காலநிலை மாற்றம் போன்ற விடயங்களில் அவர்களது கருத்தையும் ஸ்ராமர் செவிமடுத்து, உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அவ்வாறு அவர் செய்யாவிட்டால், பழமைவாதக் கட்சியின் தோல்வியின் மீது அவர் பெற்றிருக்கும் வெற்றி, பொருள் அற்றதாகி விடும். சீர்திருத்தக் கட்சியிடமிருந்து அதிகமான அழுத்தத்தை அவர் எதிர்கொள்ள வேண்டி யிருக்கும் என்பது மட்டுமன்றி இடதுசாரிக் கட்சிகளிடமிருந்து எதிர்ப்பையும் பொறுப்புக் கூறலுக்கான அழுத்தத்தையும் நிச்சயமாக அவர் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
பாலஸ்தீனத்துக்கு ஆதரவான இடதுசாரிக் கட்சிகள் கடந்த தேர்தலில், குறிப்பிடத்தக்க தாக்
கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. ஆனால் போராட்டம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. பழமைவாதக்கட்சி வெளியேற்றப்பட்டுள்ள ஒரு சூழமைவில், தொழிற்கட்சி ஆட்சியைக் கைப்பற்றியுள்ள பின்புலத்தில், பலவிதமான கொள்கைகளைக் கொண்ட இச்சிறுகட்சிகள் ஒன்றுசேர்ந்து, காஸா விடயம் போன்ற தங்களுக்கு முக்கியமான விடயங்களில், உருப்படியான நடவடிக்கைகளை அரசு எடுக்க,  அதற்கு அழுத்தத்தைப் பிரயோகிக்க வேண்டும்.
இதுவரை காலமும் ஐக்கிய இராச்சியத்தில் பின்பற்றப்பட்டு வந்த இரு கட்சி ஆட்சி தற்போது முடிவுக்கு வந்துவிட்டது என்பதை இந்தத் தேர்தல் சுட்டிக்காட்டுகிறது. தங்களது கட்சிக்குப் பிரமாணிக்கமாக இருப்பதைத் தவிர்த்து, தமது விழுமியங்களின் அடிப்படையில் மக்கள் வாக்களித்திருக்கும் இச்சூழலில், அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய நிலையில் இடது சாரிக்கட்சிகள் இருக்கின்றன என்பது அவர்களால் இங்கு சரியாகப் புரிந்துகொள்ளப்படவேண்டும்.,
நன்றி: அல்ஜஸீரா