இலங்கையில் வருடாந்தம் 10 சத வீதமானோர் நீரில் மூழ்கி மரணம்

உலக நீரில் மூழ்குதல் தடுப்பு தினம் இன்று செவ்வாய்க்கிழமை (25) அனுஷ்டிக்கப்படுகிறது. இந்நிலையில், நீரில் மூழ்குதல் உள்ளிட்ட விபத்துக்களால் இலங்கையில் ஒவ்வொரு 8 மணித்தியாலத்துக்கு  மூன்று மரணங்கள் ஏற்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட நிபுணத்துவ வைத்தியர்கள் மேலும்  தெரிவித்ததாவது,

வயது முதிர்ந்த ஒருவர் இறப்பதற்கு ஒரு அடி நீர்மட்டம் கூட போதுமானது. இலங்கையில் வருடாந்தம் 10,000 முதல் 12,000 பேர் வரை விபத்துக்களால் உயிரிழக்கின்றனர். அவர்களில் சுமார் 10 சத வீதமானோர்  நீரில் மூழ்கி உயிரிழக்கின்றனர்.

20 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் முதியவர்களே அதிக எண்ணிக்கையில்  நீரில் மூழ்கி பலியாகின்றனர் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உலகில் வருடாந்தம் 2 இலட்சத்துக்கும் அதிகமானோர் நீரில் மூழ்கி உயிரிழப்பதாக தெரிவிக்கப்படுவதாகவும் அவர்கள்  தெரிவித்தனர்.