ரணில் பின்வாங்குகின்றாரா? மாத்தறையில் அவரது அறிவிப்பு வெளிவராது எனத் தகவல்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க போட்டியிடுவது தொடர்பில் உத்தியோகபூர்வ அறிவிப்பை அடுத்த மாதம் 16 ஆம் திகதி மாத்தறையில் இடம்பெறவுள்ள பேரணியில் வெளியிடுவதற்கு தீர்மானிக்கப்பட்ட நிலையில், தற்போது அந்நிகழ்வு உறுமய காணி பத்திரங்கள் வழங்கும் நிகழ்வாக மாற்றப்பட்டுள்ளது.

தென்மாகாண ஆளுநர் லக்ஸ்மன் யாப்பா, எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர மற்றும் ரணில் விக்ரமசிங்கவின் வெளிநாட்டு பிரசார நிறுவனம் ஆகியோரின் ஏற்பாட்டில் மாத்தறையில் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அமைச்சர் காஞ்சன விஜேசேகர உள்ளிட்ட குழுவினர் எதிர்வரும் 16ஆம் திகதி மாத்தறையில் பாரிய பேரணி ஒன்றை ஏற்பாடு செய்திருந்ததுடன், அன்றைய தினம் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க போட்டியிடுவார் என்ற உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட திட்டமிடப்பட்டிருந்தனர்.

எனினும் அந்நிகழ்வு உறுமய காணி பத்திரங்கள் வழங்கும் நிகழ்வாக மாற்றப்பட்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்துகொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பில் மாத்தறை மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள், முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், பிரதேச அமைப்பாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் மற்றும் எதிர்வரும் அரசியல் செயற்பாடுகள் தொடர்பில் தெரிவிக்கும் கலந்துரையாடல் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்க தலைமையில் இடம்பெற்றுள்ளது.

இதேவேளை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க போட்டியிடுவது தொடர்பில் உத்தியோகபூர்வ அறிவிப்பை, அடுத்த மாதம் 16 ஆம் திகதி மாத்தறையில் இடம்பெறவுள்ள பேரணியில் வெளியிடுவதற்கு தீர்மானிக்கப்பட்ட நிலையில், மறுநாள் 17 ஆம் திகதி பொதுஜன பெரமுன வேட்பாளர் தொடர்பான அறிவிப்பு வெளியாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உத்தியோகபூர்வ அறிவிப்புகள் தாமதமாகலாம் அல்லது அவர் போட்டியிடுவதில் பின்னடிப்புச் செய்யலாம் என கருதப்படுகின்றது.