தமிழ் கட்சி பிரதிநிதிகளுடன் ஜெய்சங்கா் பேச்சு – பொது வேட்பாளா் குறித்தும் கேள்வி எழுப்பினாா்

01 தமிழ் கட்சி பிரதிநிதிகளுடன் ஜெய்சங்கா் பேச்சு - பொது வேட்பாளா் குறித்தும் கேள்வி எழுப்பினாா்இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் தமிழ் அரசியில் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடினார். இன்று மாலை 5.00 மணிக்கு ஆரம்பமான இந்தச் சந்திப்பு 5.30 க்கு முடிவடைந்தது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படும் 8 பேர் கொண்ட தமிழ் நாடாளுமன்ற உறுப்பினா்கள் மற்றும் கட்சித் தலைவா்கள் குழுவுடன் ஜெய்சங்கர் கலந்துரையாடியுள்ளார்.

அதன்படி பாராளுமன்ற உறுப்பினர்களான சாணக்கியன், எம்.ஏ.சுமந்திரன, சிறீதரன், செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன், சி.விக்னேஸ்வரன், எஸ். கஜேந்திரன் மற்றும் மாவை சேனாதிராஜா ஆகியோர் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

உடல் நிலை காரணமாக இன்றைய சந்திப்பில் இரா.சம்பந்தன் கலந்துகொள்ளவில்லை. அவருக்குப் பதிலாக சாணக்கியன் இணைக்கப்பட்டிருந்தாா்.

இதன்போது மாகாணங்களில் அபிவிருத்தி மற்றும் அதிகாரப்பகிர்வு தொடர்பான பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. பொது வேட்பாளா் குறித்தும் இந்திய வெளிவிவகார அமைச்சா் கேள்வி எழுப்பினாா்.