இலங்கை: கைதிகள் நாடு திரும்புவதற்கான செலவை ஏற்றது பாகிஸ்தான்…

இலங்கை சிறையில் உள்ள பாகிஸ்தான் (Pakistan) கைதிகள் சொந்த நாட்டுக்கு திரும்புவதற்கான செலவை, தமது நாடே ஏற்றுக்கொள்ளும் என்று பாகிஸ்தான்  தெரிவித்துள்ளது.

முன்னதாக, இலங்கையின் உயர்ஸ்தானிகர் மற்றும் பாகிஸ்தானிய மத்திய உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி ஆகியோருக்கு இடையில், கடந்த மே மாதம் நடைபெற்ற சந்திப்பில், தமது நாட்டின் 43 கைதிகள் நாடு திரும்புவதை உறுதி செய்வதற்கான உடனடி நடவடிக்கைகளை எடுக்க இருவரும் ஒப்புக்கொண்டனர்.

Pakistan announces plan to bear prisoner repatriation expenses from SL -  Breaking News | Daily Mirror

இந்த நிலையில் நிதிப்பிரச்சினை காரணமாக குறித்த கைதிகளை விடுதலை செய்வதில் தாமதமானது.

இந்த நிலையில், பாகிஸ்தான் கைதிகளை நாடு திரும்புவதற்கான அனைத்து செலவுகளையும் ஏற்கும் என மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் அப்துல் அலீம் கான் அறிவித்துள்ளார்.

பாகிஸ்தான் தரப்பு தகவல்படி, கிட்டத்தட்ட 14,000 பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள்  உலகம் முழுவதும் உள்ள சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் எனக் கூறப்பட்டுள்ளது.