செங்கடலுக்கு கப்பலை அனுப்பும் ரணிலின் திட்டத்தை அனுமதிக்க வேண்டாம் – பாராளுமன்றத்தில் எதிா்க்குமாறு கோரிக்கை

FSP Pubudu Jagoda செங்கடலுக்கு கப்பலை அனுப்பும் ரணிலின் திட்டத்தை அனுமதிக்க வேண்டாம் - பாராளுமன்றத்தில் எதிா்க்குமாறு கோரிக்கையேமனின் ஹூதி குழுவின் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு எதிராக செங்கடலில் வணிகக் கப்பல் போக்குவரத்தைப் பாதுகாப்பதற்காக அமெரிக்கா தலைமையிலான பன்னாட்டுக் கூட்டணியில் இணையும் விக்கிரமசிங்க-ராஜபக்ஷ அரசாங்கத்தின் முடிவை பாராளுமன்றத்தில் எதிர்க்குமாறு முன்னிலை சோசலிசக் கட்சி (FSP) அரசியல் கட்சிகளை வலியுறுத்தியுள்ளது.

ஜனவரி 03 ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அறிவிக்கப்பட்ட இந்த நடவடிக்கை அனைத்து அரசியல் கட்சிகளையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது என்று முன்னிலை சோஷலிச கட்சியின் பேச்சாளர் புபுது ஜாகொட தெரிவித்தார்.

இலங்கை ஒரு இந்த நடவடிக்கையில் இணைவதன் பின்னணி என்ன என்றும் அவா் கேள்வி எழுப்பினார். ஹூதிகளின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்கா சமீபத்தில் ‘ஆபரேஷன் ப்ராஸ்பெரிட்டி கார்டியன்’ என்ற திட்டத்தை தொடங்கியதை அவர் சுட்டிக்காட்டினார்.

காசாவில் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான தற்போதைய இஸ்ரேலிய இராணுவப் பிரச்சாரத்திற்கு பதிலடியாக செங்கடல் வணிக கப்பல் மீதான தாக்குதல்கள் என்று ஹூதிகள் அறிவித்துள்ளனர்.