அமெரிக்க அதிபர் தேர்தல்: கமலா ஹாரிஸ் அதிபராக ஜோ பைடன் ஆதரவு

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான போட்டியில் இருந்து தற்போதைய அதிபர் ஜோ பைடன் விலகியுள்ளார். தான் சார்ந்த ஜனநாயகக் கட்சி மற்றும் தேசத்தின் நலனுக்காக இந்த முடிவை எடுத்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.

வரும் நவம்பர் மாதம் அமெரிக்க நாட்டில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் வேட்பாளராக தற்போதைய அதிபர் ஜோ பைடன் அறிவிக்கப்பட்டார். இதையடுத்து அவர் பரப்புரை மேற்கொண்ட நிலையில் தேர்தலில் இருந்து விலகுவதாக  அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதோடு துணை அதிபராக இருப்பவரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ் அதிபராவதற்கு தனது ஆதரவையும் தெரிவித்துள்ளார்.

குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடும் நிலையில், ஜோ பைடனின் விலகலால் அதிபர் தேர்தலில் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.